30 ஆண்டு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஜப்பான்

30 ஆண்டு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட ஜப்பான்
Updated on
3 min read

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் அடைந்த அசுர வளர்ச்சி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு காலத்தில் ‘மேட் இன் ஜப்பான்’ (Made in Japan) என்றாலே அது தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானியப் பொருளாதாரம் ஒரு தேக்க நிலையில் சிக்கி இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பிரதமராக பொறுப்பேற்ற சனே டகாய்ச்சி தலைமையிலான அரசு, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முயன்று வருகிறது. 30 ஆண்டுகால தேக்கம் 1980-களின் நடுப்பகுதியில், ஜப்பானிய யென் (Yen) மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மிகவும் வலுவடைந்தது.

இதனால் ஜப்பானின் ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்க, ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது. இதனால் வங்கிகளில் கடன் எளிதாகக் கிடைத்ததால், தனிநபர்களும் நிறுவனங்களும் அதிக அளவில் நிலம் மற்றும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால், பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் மிக வேகமாக உயர்ந்தன. 1990-களின் தொடக்கத்தில், இந்த விலை உயர்வு ஆபத்தானது என்று உணர்ந்த ஜப்பான் அரசு, வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதனால் கடன் வாங்குவது கடினமானதால் சொத்து விலை குறையத் தொடங்கியது. சில ஆண்டுகளில் பங்குச் சந்தை மற்றும் நிலத்தின் மதிப்பு 60% முதல் 80% வரை சரிந்தது.

இது சொத்து மதிப்புக் குமிழி (Asset Bubble) வெடிப்பு என கருதப்படுகிறது. மக்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் வங்கிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. அதன் பிறகு அந்த நாடு ‘பணவாட்டம்’ (Deflation) என்ற பிடியில் சிக்கியது. இதன் பாதிப்புகள் ஒரு தலைமுறையையே மாற்றியமைத்தன.

விலை, சம்பள உயர்வு இல்லை: கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானில் பொருட்களின் விலை உயரவே இல்லை. விலை உயராததால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கவில்லை. இதனால் ஊழியர்களின் சம்பளமும் உயரவில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in