

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 27 மாதங்களில் இல்லாத வகையில் -1.21% (பூஜ்ஜியத்துக்கு கீழ்) ஆக குறைந்துள்ளது. இதுபோல சில்லறை பணவீக்கம் 0.25% ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் பணவாட்டம் என்ற அபாயம் ஏற்படுமோ என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக விலைவாசி உயர்வு அனைவருக்கும் கவலை தரக்கூடியது. இந்நிலையில், விலைவாசி குறைவது நல்லதுதானே, இதை ஏன் அபாயம் என கருத வேண்டும் என நமக்குத் தோன்றும். ஆனால், விலை தொடர்ந்து குறைவதிலும் சிக்கல் உள்ளது. எனவே, பணவீக்கம், பணவாட்டம், அதன் வகைகள், காரணங்கள், அதன் சாதகம் மற்றும் பாதகங்கள் பற்றி பார்ப்போம்.