

நடப்பு 2026-ம் ஆண்டில் இதுவரை 36 நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டி உள்ளன. மணிப்பால் ஹெல்த் (ஜூலை 29), ஜுனைப்பர் கிரீன் எனர்ஜி (30) ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ விரைவில் தொடங்க உள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளன. இதில் மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனமான ஜெப்டோ அதிக பட்சமாக ரூ.8,010 கோடிக்கு ஐபிஓ வெளியிட உள்ளது.