மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்தியா

மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்தியா
Updated on
2 min read

‘மா​தா ஊட்​டாத சோறை, மாம்பழம் ஊட்​டும்’ என்று சொல்​வார்​கள். அந்​தளவுக்கு சுவை கூட்​டும் முக்​க​னிகளில் ஒன்​று​தான் மாம்​பழம். அல்​போன்​சா, கேசர், மல்​கோ​வா, பங்​க​னப்​பள்ளி உட்பட பல இந்​திய மாம்பழ ரகங்​களுக்கு உலகள​வில் தனி சிறப்பு உள்​ளது. உலகள​வில் மாம்​பழங்​கள் உற்​பத்​தி​யில் இந்​தியா முதலிடத்​தில் உள்​ளது. சுமார் 1,500 ரகங்​கள் உள்​ள​தாகப் புள்​ளி​விவரங்​கள் கூறுகின்​றன.

எனினும், 1,000 மாம்பழ ரகங்​கள் வணிக ரீதி​யாக உள்​ளன. குறிப்​பாக உத்தர பிரதேசம், ஆந்​தி​ரா, தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், திண்​டுக்​கல் (நத்​தம்), மதுரை ஆகிய பகு​தி​களில் மாம்பழ உற்​பத்தி அதி​க​மாக உள்​ளது.

உலகள​வில் 50 சதவீத மாம்​பழங்​களை இந்​தியா உற்​பத்தி செய்​தா​லும், அதில் ஒரு சதவீத அளவுக்கே வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது. ஐக்​கிய அரபு அமீரகம், அமெரிக்​கா, பிரிட்​டன் உட்பட பல்​வேறு நாடு​களுக்​கும் இந்​திய மாம்​பழங்​கள் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன.

குறிப்​பாக அமெரிக்​கா​வில் இந்​திய மாம்​பழங்​களுக்கு அமோக வரவேற்பு உள்​ளது. விமான சரக்​குக் கட்​ட​ணம் அதி​கரிப்​பு, போக்​கு​வரத்​துத் தடை போன்ற சிக்​கல்​கள் இருந்​தா​லும், 2026-ம் ஆண்​டுக்​கான இந்​திய மாம்பழ ஏற்​றும​திக்கு அங்கு அதிக தேவை உள்​ளது.

அதி​லும் அல்​போன்​சோ, கேசர் ரக மாம்​பழங்​கள் ஏற்​றும​தி​யில் முன்​னிலை வகிக்​கின்​றன. கடந்த 2024-ம் ஆண்டு மாம்​பழங்​கள் ஏற்​றுமதி மூலம் இந்​தி​யா​வுக்கு 60 மில்​லியன் டாலர் வரு​வாய் கிடைத்​தது.

ஆனால், இதற்கு பூச்​சிக் கொல்லி மருந்​துகள் அளவு, கதிர் வீச்சு போன்ற பிரச்​சினை​கள் உள்​ளன. தவிர பரு​வம் பொய்த்து போதல் அல்​லது திடீரென மழை போன்ற காரணங்​களால் விளைச்​சல் பாதிக்​கப்​படு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in