உலகளாவிய திறன் மையங்கள் வரமா? சாபமா?

உலகளாவிய திறன் மையங்கள் வரமா? சாபமா?
Updated on
3 min read

சமீப​கால​மாக ஊடகங்​களில் வெளி​யாகும் தகவல் தொழில்​நுட்​பத் துறை சார்ந்த செய்​தி​களில் உலகளா​விய திறன் மையங்​கள் (Global Capability Centres – GCC), தரவுப் பகுப்​பாய்வு மையங்​கள் (Data Centres), செய்​யறிவு (AI) போன்​றவை மிக முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன. குறிப்​பாக கூகுள் அடுத்த 5 ஆண்​டு​களில் விசாகப்​பட்​டினத்​தில் 15 பில்​லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்​பந்​தம் செய்​திருப்​ப​தாக செய்தி வெளி​யான​திலிருந்து கார​சா​ர​மான விவாதங்​கள் நடந்​தன.

ஜிசிசி என்​பவை பன்​னாட்டு நிறு​வனங்​கள் தங்​கள் செயல்​பாடு​களை மேம்​படுத்த, புதுமை மற்​றும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்​காக வெளி​நாடு​களில் நிறு​வும் பிரத்​யேக மையங்​களாகும். இந்​தி​யா​வில் சுமார் 1,800 ஜிசிசி-கள் இயங்கி வரு​வ​தாக புள்ளி விவரங்​கள் கூறுகின்​றன.

இவை ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு (R&D), ஏஐ துறை​களில் முக்​கியப் பங்​காற்றி வரு​கின்​றன. இந்த மையங்​கள் தொடர்ந்து நிறு​வப்​படு​வ​தால் ஏற்​படக்​கூடிய சாதக, பாதகங்​களை சுருக்​க​மாகப் பார்க்​கலாம். உலக மக்​கள் தொகை​யில் இந்​தியா 18% ஆக இருந்​தா​லும், அனைத்து நன்​னீர் இருப்​புக்​களில் (fresh water) 4% மட்​டுமே அணுகும் நிலை​யில் இருக்​கிறது.

இதில் பெரும்​பகுதி நிலத்​தடி நீர். இருப்​பினும், உலகள​வில் நிலத்​தடி நீர் உறிஞ்​சுதலில் இந்​தி​யா​வின் பங்கு சுமார் 25% ஆகும். இந்​தி​யா​வில் கூடு​தலாக மாபெரும் ஏஐ தரவு மையங்​கள் நிறு​வப்​படும்​போது, பிரச்​சினை மேலும் அதி​கரிக்​கக்​கூடும்.

டிஜிட்​டல் மற்​றும் எரிசக்தி உள்​கட்​டமைப்பை உரு​வாக்க பில்​லியன் கணக்​கான டாலர்​களை வெளி​நாடு​களி​லிருந்​தும் உள்​நாட்​டிலிருந்​தும் முதலீ​டாக ஈர்த்த போதி​லும் ஜிசிசி.களுக்​கான இந்​தி​யா​வின் திறன் தேவை 2030-ல் 1.5-லிருந்து சுமார் 6.5 கிகா​வாட்​டாக அதி​கரிக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், நீர் நுகர்​வால் எழும் பிரச்​சினை​கள் மேலும் தீவிர​மாகும்.

2023-ல் வழக்​க​மான ஒரு அமெரிக்க தரவு மையம் 180 கோடி லிட்​டர் தண்​ணீரை (தினசரி 50 லட்​சம் லிட்​டர்) நேரடி​யாக குளிர்விக்​கும் நோக்​கங்​களுக்​காக​வும், மேலும் 1000 கோடி லிட்​டர் நீரை மறை​முக​மாக அதன் மின்​சா​ரத் தேவை​களை உற்​பத்தி செய்​ய​வும் பயன்​படுத்​தி​யது. அமெரிக்​கா​வின் அயோ​வா​வில் உள்ள கூகுளின் ஏஐ தரவு மையங்​களில் ஒன்று 2024-ம் ஆண்​டில் 380 கோடி லிட்​டர்​களை பயன்​படுத்​தி​யது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in