

புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்பிஐ) இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர்கள் ரூ.60,847 கோடி (நிகர அளவு) மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இதன்மூலம் 2026-ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் மொத்தம் ரூ.1.92 லட்சம் கோடி (நிகர அளவு) முதலீடுகள் வெளியேறியுள்ளன.