ரூ.88,180 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற எப்பிஐ

ரூ.88,180 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற எப்பிஐ
Updated on
1 min read

கடந்த பிப்ரவரியில் இந்தியப் பங்குச் சந்தைகள் மிகவும் வலுவாகக் காணப்பட்டது. அப்போது வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (எப்பிஐ) சுமார் ரூ.22,615 கோடியை முதலீடு செய்திருந்தனர்.

இது கடந்த 17 மாதங்களில் இல்லாத உச்சமாகும். ஆனால், பிப்ரவரி 28-ல் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததால் மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இந்தப் போர் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து வருகின்றன.

எப்பிஐ அதிக அளவில் பங்குகளை விற்பதே சரிவுக்கு முக்கிய காரணம். நடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை சுமார் ரூ.88,180 கோடியை எப்பிஐ திரும்பப் பெற்றுள்ளனர். இதன் மூலம், நடப்பு 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரையில் இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய மொத்த அந்நிய முதலீடு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in