

பறக்கும் மின்சார காருடன் ராஜ் சிவானந்தம்
உலகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலால் பயண நேரம் வெகுவாக விரயமாகிறது. இதற்கொரு தீர்வாகவும், பயண நேரத்தைச் சேமிக்கவும் வளர்ந்த நாடுகள் பறக்கும் மின்சார கார்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
முதன்முறையாக சீனாவில் இருவர் பயணிக்கும் பறக்கும் மின்சார கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது 100 கார்கள் புழக்கத்தில் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளும் தற்போது இந்த முயற்சியில் இறங்கியுள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் பறக்கும் காரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் திருப்பூர் தொழிலதிபர் இறங்கியுள்ளார். திருப்பூர் குப்புசாமிபுரத்தைச் சேர்ந்த ராஜ் சிவானந்தம் (42), சீனாவில் கடந்த 12 ஆண்டுகளாக நான்கு சக்கர மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் சீனாவின் இவ்டால் (YIVTOL) பறக்கும் மின்சார கார்களின் இரு மாடல்களை தனது நியூ எனர்ஜி வேகன் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளார். இது செங்குத்தாக மேலெழுந்து பறப்பதுடன் செங்குத்தாக தரையிறங்கும் (vertical takeoff landing electric flying car).
இதுகுறித்து ராஜ் சிவானந்தம் கூறியதாவது: சீனாவின் இவ்டால் நிறுவனத்தின் இரு மாடல் பறக்கும் மின்சார கார்களைத் இந்தியாவில் விற்பனை செய்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளோம்.