

புயல் வரும்போது வலிமை யான மரங்களையும் வேரோடு சாய்த்துவிடும். ஆனால், சூறாவளி காற்றையும் சாதாரண புல் எதிர்த்து நிற்கும். வலிமையான மரத்தைவிட எப்படி ஒரு சாதாரண புல் கடும் புயலை தாங்கி நிற்கிறது என்பதை நாம் அறிந்து இருக்கிறோமா?
மரங்களைக் காட்டிலும் புல்லுக்கு நெகிழ்வுத்தன்மை (பிளெக்ஸிபிலிட்டி) அதிகம். அதனால்தான் சக்திவாய்ந்த புயலை அது தாங்கி நிற்கிறது. ஆனால், கட்டமைப்பில் உறுதியான மரங்கள் நெகிழ்வுத்தன்மை குறைவால் சாய்ந்து விடுகின்றன.