

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) 2025-ம் ஆண்டில் இந்திய நிறுவன பங்குகளை இதுவரை இல்லாத வகையில் விற்பனை செய்துள்ளனர். இதுவரை அவர்கள் (டிசம்பர் 27) ரூ.2,31,990 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். அதேநேரம் ரூ.73,583 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர். நிகர விற்பனை ரூ.1,58,407 கோடி என புள்ளி விவரம் கூறுகிறது.
கடந்த 2024-ம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் எப்ஐஐ விற்பனை செய்த பங்குகள் மதிப்பு ரூ.1,21,210 கோடி. அவர்கள் வாங்கிய பங்குகள் மதிப்பு ரூ.1,21,637 கோடி. நிகர முதலீடு ரூ.427 கோடி ஆகும்.