வீட்டிலிருந்தே பணிபுரிய ஏற்ற துறைகள்..

வீட்டிலிருந்தே பணிபுரிய ஏற்ற துறைகள்..
Updated on
2 min read

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் மோதல் உள்​ளிட்ட சர்​வ​தேச புவி​சார் அரசி​யல் சூழல்​களால் உலக அளவில் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பெரு​மள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த அசா​தாரண சூழ்​நிலை​யில், “நாட்​டின் குடிமக்​கள் அனை​வரும் எரிபொருளை மிகச் சிக்​க​ன​மாகப் பயன்​படுத்த வேண்​டும்” என்று பிரதமர் நரேந்​திர மோடி சமீபத்தில் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

மீண்​டும் முழு​மை​யான ‘வீட்​டிலிருந்தே பணி செய்​யும் முறை’ அமல்​படுத்​தப்​பட்​டால், இந்​தி​யா​வில் எந்​தெந்​தத் துறை​கள் உடனடி​யாக அதற்கு மாற முடி​யும்? என்​பது குறித்த ஒரு விரி​வான அலசல் இதோ:

உடனடி​யாக மாறக்​கூடிய துறை​கள்

கரோனா காலத்து உள்​கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் வலு​வான டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் காரண​மாக சில துறைகள் ஒரே நாளில் 100% தொலை​தூரப் பணிக்கு (Remote Work) மாறத் தயா​ராக உள்​ளன.

தகவல் தொழில்​நுட்​பம் (IT) மற்​றும் மென்​பொருள் சேவை​கள்: இந்​தி​யா​வின் ஐ.டி. துறை இப்​போதும் வீட்​டிலிருந்தே பணி செய்​வதற்கு மிக​வும் ஏற்ற துறை​யாகத் திகழ்​கிறது. பெரும்​பாலான நிறு​வனங்​கள் ஏற்​கெனவே ‘ஹைப்​ரிட்’ (Hybrid) முறை​யில் இயங்கி வரு​வ​தால், முழு​மை​யான டிஜிட்​டல் பணி முறைக்கு மாறு​வ​தில் இவர்​களுக்கு எந்​தச் சிரம​மும் இருக்​காது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in