பத்து ரூபாயில் ஒளிந்திருக்கும் பரம ரகசியம்! - ரிலையன்ஸ் நுகர்பொருள் நிறுவன இயக்குநர் டி.கிருஷ்ணகுமார் சிறப்பு நேர்காணல்

பத்து ரூபாயில் ஒளிந்திருக்கும் பரம ரகசியம்! - ரிலையன்ஸ் நுகர்பொருள் நிறுவன இயக்குநர் டி.கிருஷ்ணகுமார் சிறப்பு நேர்காணல்
Updated on
4 min read

கச்சா எண்ணெயை பெருமளவில் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது மேற்கு ஆசிய போர்.

இத்தகைய பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு நடுவே, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து நுகர்பொருள் துறையில் (FMCG) அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (RCPL) நிறுவனம்.

இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய மூளையாகச் செயல்படுபவர் அதன் இயக்குநர் டி.கிருஷ்ணகுமார். நுகர்பொருள் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அவர் இந்திய நுகர்வோரின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'கேம்பா கோலா' (Campa Cola), 'இன்டிபென்டன்ஸ்' (Independence) போன்ற முக்கிய பிராண்டுகளை சந்தையில் முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். உலகளாவிய பொருளாதார சவால்கள், இந்திய நுகர்பொருள் சந்தையின் தற்போதைய நிலை மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல் இதோ:

Q

உலக அளவில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா எப்படி மீண்டு வரும் என நினைக்கிறீர்கள்?

A

நெருக்கடிகளைச் சாதனைகளாக மாற்றுவதுதான் இந்தியாவின் வரலாறு. ஒவ்வொரு சவாலும் நமக்கு ஒரு புதிய வாய்ப்பையே உருவாக்குகிறது.

தேசமாக ஒன்றிணைந்து அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் செயல்பட்டால், இந்த இக்கட்டான சூழலிலிருந்தும் நாம் வலிமையோடு வெளிவரலாம். உலகப் பொருளாதாரத் தேக்க நிலையிலும், மற்ற நாடுகளைவிட இந்தியா இன்றளவும் நல்ல நிலையிலேயே நீடித்து வருகிறது.

Q

தொழில்நுட்பம் தாண்டி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மனித வேலையைப் பறித்துவிடும் என்ற அச்சம் இருக்கிறதே?

A

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏஐ என்பது ஒரு பகுதி, அவ்வளவுதான். கணினி பரவலாக பயன்பாட்டுக்கு வந்தபோதும் இப்படித்தான் வேலைபறிபோய்விடும் என பயந்தார்கள். சில தொழில்கள் காணாமல் போனது.

ஆனால், புதிய தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு அபரிமிதமாக அதிகரித்தது. எனவே, புதிய தொழில்நுட்பத்தை பார்த்து அச்சப்படத் தேவையில்லை.

ஏஐதொழில்நுட்பத்தைக் கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நாம் அடிமையாகக் கூடாது. அதை அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆக்கப்பூர்வ மாக அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Q

முன்னணி நிறுவனங்களை முந்தி முதலிடத்தைப் பிடிக்க உங்களின் (RCPL) அடுத்த திட்டம் என்ன?

A

நான் ஓய்வுபெற்ற பிறகு, திரு. முகேஷ் அம்பானி என்னை அழைத்து, ‘மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு நல்ல வியாபாரம் செய்ய வேண்டும்’ என்றார். எப்எம்சிஜி துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகம்.

அவர்கள் விளம்பரத்துக்கு நிறைய செலவு செய்வார்கள். ஆனால், அவர்கள் நிர்ணயிக்கும் விலை பாமர மக்களுக்கு ஏற்ற விலையாக இருக்காது. அதனால் உலகத் தரமான பொருளை, மலிவான விலையில் கொடுக்க திட்டமிட்டோம்.

இந்தியாவில் தரமான பொருள் என்றால் விலை அதிகம், விலை குறைவு என்றால் தரம் இருக்காது என்ற நிலை இருந்தது. அதை மாற்ற விரும்பினோம். பெங்களூருவில் ஒரு லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D) அமைத்து, உலகத் தரமான பொருட்களைச் சாமானியர்களுக்கு ஏற்ற விலையில் உருவாக்கினோம்.

அதன் வெற்றியாகத்தான் கடந்த நிதியாண்டில் ரூ.22,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளோம். கேம்பா கோலா மூலம் மட்டுமே ரூ.4,700 கோடி வருவாய் ஈட்டி உள்ளோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in