

அவ்வப்போது நாம் படித்த, கேட்ட 15 நல்ல பொன்மொழிகளை, இங்கே உங்களுக்காகத் தொகுத்து தந்துள்ளோம்.
* எல்லாவற்றையும் நாம் நியாயப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. சில நேரங்களில் ஒப்புக்கொண்டு நம்மை மாற்றிக் கொள்ளலாம்.
* வாழ்க்கையில் எது குறைவாக இருக்கிறதோ அது நீண்ட நாட்களுக்கு இருக்கும். எது அதிகமாக இருக்கிறதோ அது குறைவான நாட்களுக்கே நம்மோடு இருக்கும். சர்க்கரையில் இருந்து சாப்பாடு வரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனவே, நமக்கு பிடித்தவற்றை குறைவாக நம்மோடு வைத்துக்கொள்வது நல்லது.
* தோல்வி என்பது தோல்வியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ஒரு திருப்புமுனையாகவும் இருக்கலாம்.
* இயற்கையின் மொழி என்பது "என்னால் முடியும்.. தொடர்ந்து முன்னேறுவேன்" என்பதுதான். வெட்டுகிற புல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். தடுக்கிற நீர் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருக்கும்.