

எதிர்கால வாழ்க்கைக்கான சேமிப்புக்கு நாம் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உண்டு. அதற்கான திட்டமிடுதலும் நமக்குள் இருக்கும். ஆனால், அதனை விரைவாக தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நமக்கு வரவே வராது.
நாட்கள் வாரங்களாகும், வாரங்கள் மாதங்களாகும், மாதங்கள் வருடங்களாக ஓடும். அதுவரை முதலீடு செய்ய வேண்டும் என்ற நமது நோக்கத்தையும் தள்ளிப்போட்டுக்கொண்டே செல்வோம். ஒரு நாள் கண்விழித்துப் பார்க்கும்போது, நாம் அதை நோக்கி இன்னும் ஒரு அடி கூட முன்னகரவில்லை என்பது தெரியவரும். அப்போதுததான் வருந்துவோம்.
முதலீட்டைப் பொறுத்தவரை, தள்ளிப்போடுதல் என்பது வெறும் சோம்பேறித்தனம் மட்டுமல்ல; அது உங்களது செல்வத்தைச் சிதைக்கும் ஒரு கெட்டகுணம். தாமதம் எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்பதை இங்கே காண்போம்.