

இந்தியாவில் ஜவுளித் தொழில் துறை விவசாயத்துக்கு அடுத்துஅதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 5.8 கோடி ஸ்பிண்டில்கள் (நூல்நூற்பு இயந்திரம்) உள்ளன. இவற்றில்தமிழ்நாட்டில் மட்டும் 1.9 கோடி ஸ்பிண்டில்கள் உள்ளன. இந்திய ஜவுளித்தொழிலில் தமிழ்நாடு முக்கிய பங்கு (46%) வகிக்கிறது. ஆனால் அதற்கு தேவையான முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பருத்தி சாகுபடியில் மிகவும் பின்தங்கியுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக இந்தியாவில் 3.5 கோடி பேல் பருத்தி (ஒரு பேல் 170 கிலோ) உற்பத்தியாகிறது. 50 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 1.1 கோடி பேல் பருத்தி நுகர்வு செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேல் பருத்தி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.