நாக்பூர் வெயிலில் மலர்ந்த குளிர் காஷ்மீர் குங்குமப்பூ

நாக்பூர் வெயிலில் மலர்ந்த குளிர் காஷ்மீர் குங்குமப்பூ
Updated on: 
2 min read

குங்குமப்பூ என்றாலே நம் நினைவுக்கு வருவது காஷ்மீரின் உறைய வைக்கும் குளிரும், பனி படர்ந்த மலைச்சரிவுகளும்தான். ஆனால், சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பெயர்போன மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், 400 சதுர அடி கொண்ட ஒரு சிறிய அறைக்குள் காஷ்மீர் குங்குமப்பூவை விளைவித்து, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர் ஒரு தம்பதியினர்.

நாக்பூரைச் சேர்ந்த அக்சய் ஹோலே மற்றும் அவரது மனைவி திவ்யா லோஹகரே ஹோலே ஆகியோர்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள். பி.பி.ஏ. பட்டதாரி

யான அக்சயும், வங்கித் துறையில் பணியாற்றி வந்த திவ்யாவும் 2020-ல் புதிய தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் உள்நாட்டில் குங்குமப்பூவின் உற்பத்தி குறைவாகவும், தேவை மிக அதிகமாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். நாக்பூரிலேயே குங்குமப்பூ சாகுபடி செய்யத் திட்டமிட்டனர். ஆனால், நாக்பூரின் தட்பவெப்ப நிலையில் பாரம்பரிய முறையில் இதைச் சாகுபடி செய்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தனர்.

உள்ளரங்கு முறையில் குங்குமப்பூ வளர்க்கும் தொழில நுட்பத்தைக் கற்றுக்கொள்ள அக்சய் தம்பதியினர் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டனர். அங்கு அனுபவம் வாய்ந்த குங்குமப்பூ விவசாயிகளுடன் சுமார் மூன்றரை மாதங்கள் தங்கியிருந்து சாகுபடி நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தனர்.

முதற்கட்டமாக, சுமார் 1 கிலோ எடையுள்ள 100 குங்குமப்பூ விதைக் கிழங்குகளை வைத்துப் பரிசோதனை முயற்சியைத் தொடங்கினர். முதல் அறுவடையில் ஒரு சில கிராம் குங்குமப்பூ மட்டுமே கிடைத்தது.

அடுத்த கட்டமாக 350 கிலோ விதைக் கிழங்குகளை சாகுபடி செய்தனர். அந்த முயற்சியில் சுமார் 1.6 கிலோ குங்குமப்பூ விளைந்தது. இந்த வெற்றி அவர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

Loading content, please wait...

X