

தமிழகத்தில் அதிக அளவில் கிராம்பு பயிர் செய்யும் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 1,000 டன்னுக்கு மேல் கிராம்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் ‘கன்னியாகுமரி கிராம்பு’ புவிசார் குறியீடு பெற்றது. இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைத்து வந்தது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்கள் கிராம்பு அறுவடை செய்யும் காலமாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கரும்பாறை, சிற்றாறு, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கிராம்பு அறுவடை நடந்து வருகிறது.