

இந்தியாவின் மின்சார கார் சந்தை பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. முன்பு இந்திய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தச் சந்தையில் இப்போது உலகளவிலான நிறுவனங்கள் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.
வாகனத் துறை பகுப்பாய்வு நிறுவனமான ஜாட்டோ டைனமிக்ஸின் புள்ளிவிவரங்கள் திடுக்கிடுவதாக உள்ளன. குறிப்பாக, சீன ஆதரவுடன் செயல்படும் வாகன உற்பத்தியாளர்கள், இந்தியாவின் மின்சார கார் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை குறுகிய காலத்தில் கைப்பற்றி உள்ளனர். இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களின் போட்டிச் சூழலை புரட்டிப் போட்டிருக்கிறது.