மாறிவரும் நுகர்வு கலாச்சாரம்

மாறிவரும் நுகர்வு கலாச்சாரம்
Updated on
3 min read

நுகர்வெனும் பெரும்பசி மனிதர்களை இந்தத் தொழில்நுட்ப உலகில் பல வழிகளில் ஆட்கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய நுகர்வுக் கலாச்சாரத்தின் கட்டமைப்பு பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நுகர்வோராகிய நாம் முன்பு செலவழித்ததைவிட இப்போது அதிகம் செலவு செய்கிறோம்.

ஆனாலும் உணவுப் பொருட்களுக்கு குறைவாகவும், மற்ற பொருட்களுக்கு அதிகமாக செலவிடுகிறோம் என புள்ளிவிவரம் கூறுகிறது.

ஒரு குடும்​பத்​தின் மொத்​தச் செல​வில் உணவுக்​கென செல​விடு​வது 50 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கிறது.

அதே​நேரம் எந்த வரு​மானப் பிரிவைச் சேர்ந்​தவ​ராக இருந்​தா​லும் ரெஃப்​ரிஜிரேட்​டர், வாக​னங்​கள், செல்​போன் போன்ற நீண்​ட​நாள் உழைக்​கக்​கூடிய பொருட்​களுக்கு (durable goods) செல​விடு​வது அதி​கரித்​திருக்​கிறது.

ஒரு காலத்​தில் இந்​தப் பொருட்​களை நாம் வாங்​க​மாட்​டோமா என்​றிருந்த நிலை மாறி இன்​றைக்கு பெரும்​பாலானோர் வாங்​கக்​கூடிய அவசி​ய​மான பொருட்​களாக இவை மாறி​யிருக்​கின்​றன.

நாடு முழு​வதும் சுமார் 2.5 லட்​சம் குடும்​பத்​தினரிடம் நடத்​திய ஆய்​வின் முடிவு `வீட்டு நுகர்​வுச் செலவு ஆய்​வு, 2025 (Household Consumption Expenditure Survey – HCSE)’ என்​கிற பெயரில் அறிக்​கை​யாக வெளி​யாகி இருக்​கிறது.

இதில் பங்​கேற்​றவர்​களில் 60% பேர் கிராமப்​புறத்​தைச் சேர்ந்​தவர்​கள். இந்த ஆய்​வில் உணவுப் பொருட்​களான தானி​யங்​கள், பால் போன்​றவை​யும் எரிபொருள் நுகர்​வு, மருத்​து​வச் செலவு மற்​றும் பல்​வேறு வகை​யான நீண்​ட​காலம் உழைக்​கக்​கூடிய பொருட்​கள் குறித்​தும் விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன.

அதி​கரித்து வரும் வரு​மானம், மாறிவரும் முன்​னுரிமை​கள் மற்​றும் பொருளா​தார நிலை​மை​களை இந்​தி​யக் குடும்​பத்​தினர் எப்​படி எதிர்​கொள்​கிறார்​கள் என்​ப​தைக் கண்​டறிவது இந்த ஆய்​வின் நோக்​க​மாக இருந்​தது. உணவுக்​காகச் செல​வழிக்​கும் தொகை தொடர்ந்து குறைந்து வரு​வதும், நீண்​ட​காலம் உழைக்​கும் பொருட்​களின் மீது செல​வழிக்​கும் தொகை அதி​கரித்து வரு​வதும் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in