வணிக சுழற்சி முதலீடு

வணிக சுழற்சி முதலீடு
Updated on
1 min read

அஞ்சலிக்கு எப்போதும் நிதித்துறையில் ஆர்வம் உண்டு. அவள் சம்பாதிக்கத் தொடங்கியதும், முதலீடு செய்வதைப் பற்றி அவளுக்கு ஆர்வம் அதிகரித்தது. ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது, பொருளாதாரம் ஒருபோதும் நேர்க்கோட்டில் வளர்வதில்லை என்பதை உணர்ந்தாள்.

அது சில சுழற்சிகளைக் கடந்து செல்கிறது; அதாவது பொருளாதாரம் வேகம் எடுக்கும், மெதுவாகும், மீண்டு வரும் மற்றும் சுருங்கும் காலங்களைக் கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் மற்றும் வணிகங்கள் செயல்படும் விதத்தில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் இருக்கும்.

அதன்படி, வணிக சுழற்சி முதலீடு (பிசினஸ் சைக்கிள் இன்வெஸ்டிங்) என்பது பொருளாதாரத்தின் ஒரு குறிப்பிட்ட சுழற்சியில் சில துறைகள் சிறப்பாகச் செயல்படும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. பொருளாதாரம் வளரும்போது, மக்கள் மற்றும் வணிகங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தொழிற்சாலைகள் தீவிரமாக இயங்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in