

மருத்துவ அவசரம், எதிர்பாராத வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் என எதிர்பாராத நிதி நெருக்கடிகள் எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டுக் கதவைத் தட்டலாம். இதுபோன்ற சூழலில் உடனடி பணத் தேவையைச் சமாளிக்க பெரும்பாலானோர் நாடுவது கிரெடிட் கார்டு அல்லது அவசர கால கடன்.
இந்த இரண்டுமே உடனடி நிதியை வழங்கி கை கொடுத்தாலும், அவற்றுக்கான வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் முறை, நீண்டகால நிதிப் பாதிப்பு ஆகியவற்றில் கணிசமான வேறுபாடுகள் உள்ளன.
வெறும் `வசதியை' மட்டும் பார்க்காமல், சரியான நிதித் தேர்வைச் செய்வது எப்படி? கிரெடிட் கார்டு: இது முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பை வழங்குகிறது. இதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
பில் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விட்டால், இதற்கு வட்டி எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், நிலுவையை அடுத்தடுத்த மாதங்களுக்குக் கொண்டு செல்லும்போது, மிக அதிக வட்டி விதிக்கப்படும்.
அவசர கால கடன்: இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்று, அதை மாதாந்திர தவணைகளில் (இஎம்ஐ) செலுத்தும் முறை. கடன் வாங்கும்போதே மாதாந்திரத் தவணை மற்றும் கடன் காலம் தெரிந்துவிடுவதால், பட்ஜெட் போடுவது எளிதாகிறது.