

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 'ரிக்கி' என்ற மின்சார ஆட்டோவை 5.4 KWH பேட்டரியுடன் அறிமுகம் செய்துள்ளது. மூன்று சக்கர வாகனங்களை நம்பி பிழைப்பு நடத்தும் சமூகத்துக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில் இதன் தொடக்க விலை ரூ.1,90,890-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 45,000-க்கும் மேல் மின்சார ஆட்டோ விற்பனையாகி வருகின்றன.
ஆனால் பேட்டரி, பிரேக், சேசிஸ் உறுதித் தன்மை தொடர்பான பிரச்சினைகள், குறைவான சேவை ஆதரவு ஆகியவை பிரச்சினையாக உள்ளது என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் ரிக்கி ஆட்டோவை தயாரித்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.