ஏஐ என்றோர் ஏறு தழுவுதல் | ஏஐ வாசி 15

ஏஐ என்றோர் ஏறு தழுவுதல் | ஏஐ வாசி 15
Updated on: 
2 min read

அனுதினமும் மாறிக் கொண்டிருக்கிறது செய்யறிவு. சாட்பாட்களை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்பதிலேயே பலருக்கும் குழப்பம் உள்ளது. அதற்குள் ஏஜென்ட்கள் வந்துவிட்டன. நேற்று கற்றவை பழைய அறிவு. இன்று அதன் எல்லைகள் விரிந்துள்ளன.

நாளை இன்னும் விரியும். இச்சூழலில் தொடர்ந்து ஏஐ கற்பது எப்படி? நுட்பங்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைவது இயல்பானதே. மனிதகுல வரலாற்றில் இது காலம்தோறும் நிகழ்கிறது. ஆயினும் செய்யறிவு வளரும் வேகம் திகைப்பூட்டுவதாக உள்ளது. சென்ற வாரம் வரை இயலாது என்றிருந்தவை இன்று இயல்பாக மாறிவிட்டன.

ஏஐ என்பது ஒரு திமிறும் காளை. ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றின் திமிலைப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டுவரும் வீரனுக்கு நேர்த்தியும் துணிச்சலும் வேகமும் அவசியம். அதுபோலத் தான் செய்யறிவும். ஒரு சராசரிப் பயனாளராக என்னவெல்லாம் செய்யலாம்? இன்று நம்முன் இருக்கும் ஆகப்பெரிய சவால் தகவல் பெருக்கம்.

எதைத் தேடினாலும் எண்ணற்ற தகவல்கள் வந்து குவிகின்றன. இதில் நமக்குத் தேவையானவை என்னவென்று அறிதல் அவசியம். ஏஐ கற்பதிலும் இந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது.

நம் பார்வையில் படும் அனைத்து ஏஐ கருவிகளையும் பயன்படுத்த முனைந்தால் நேரவிரயம். உங்கள் துறை சார்ந்த சங்கதிகளைத் தேடித் தேடி படியுங்கள். உதாரணமாக நீங்கள் ஓர் போட்டோகிராபர் என்றால் அதற்கான ஏஐ நுட்பங்களை ஆழமாகக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஓர் ஆசிரியர் என்றால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை இனிதாக்கச் செய்யறிவு மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என்று அறிந்துகொள்ளுங்கள்.

Loading content, please wait...

X