பள்ளித் தலமனைத்தும் | ஏஐ வாசி 03

பள்ளித்  தலமனைத்தும் | ஏஐ வாசி 03
Updated on
2 min read

கல்வித்துறையில் செய்யறிவின் பங்கு அபரிமிதமானது. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செய்யறிவுக் கருவிகள் வந்துவிட்டன. இது நல்லதுதானா? ஆம் என்கிறது ஒரு தரப்பு. இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.

கல்​வி​யில் தொழில்​நுட்​பம் என்​பது புதிதல்ல. காலந்​தோறும் கல்விக்​கூடங்களில் புதுப்​புது தொழில்​நுட்​பங்​கள் வந்​து​கொண்டே தான் இருக்​கின்​றன. ஆயினும் இப்​போதும் நடப்​பது பத்​தோடு பதினொன்று அல்ல.

முன்பு வந்த தொழில்​நுட்​பங்​களுக்​கும் செய்​யறிவுக்​கும் மிகப்​பெரிய வேறு​பாடு​கள் உள்​ளன. கரும்​பலகை இருந்​தது. அதற்​குப் பதிலாக ஸ்மார்ட் போர்ட்​கள் வந்​தன. அது​போலத்​தானே செய்​யறி​வும் என்​றால் இல்​லை. கற்​றல் கற்​பித்​தல் செயல்​பாட்​டையே மாற்ற வல்​லது செய்​யறி​வு. இது குறித்​தான சாதக பாதகங்​களைத் தெரிந்​து​கொள்​வோம்.

நல்​லனவற்​றி​லிருந்து தொடங்​கு​வோம். சராசரி​யாக நம்​முடைய வகுப்​பறை​களில் நாற்​பது மாணவர்​கள் உள்​ளனர். ஒரே ஓர் ஆசிரியர். அனை​வருக்​கும் ஒரே பாடம். ஒரே வேகம். இங்​கு​தான் சிக்​கல். ஒவ்​வொரு குழந்​தை​யும் ஒவ்​வொரு வேகத்​தில் கற்​கும்.

அது​மட்​டுமல்ல. ஒரு மாணவனே வெவ்​வேறு பாடங்​களை வெவ்​வேறு வேகத்​தில் கற்​கக்​கூடும். இயற்​பியலை வேக​மாகக் கற்​கும் மாணவர் ஒரு​வருக்கு உயி​ரியல் கசக்​கலாம். செய்​யறிவு பெரிதள​வில் உதவி செய்​ய​விருப்​பது இங்​கு​தான். பெர்​ஸ்​னலைஸ்டு லேர்​னிங் என்று ஒன்று இருக்​கிறது.

அதாவது உங்​களுக்கு என்ன வேகத்​தில் புரி​கிறதோ அந்த வேகத்​தில் கற்​பது. வேகம் மட்​டுமல்ல. ஆழமும் மாணவரின் ஆர்​வத்​துக்​கேற்​பத் தீர்​மானிக்​கப்​படும். இன்று கூட எல்​எல்​எம் என்​னும் மொழி​மா​திரி​களில் இந்த வசதி உள்​ளது.

கடின​மான டாப்​பிக் ஒன்றை எடுத்​துக்​கொள்​ளுங்​கள். ஐந்​தாம் வகுப்பு மாணவனுக்கு விளக்​கு​வது போலச் சொல் என்​றால் சமத்​தாகச் சொல்​லும் செய்​யறி​வு. ஒரு மாணவனுக்கு ரஜினி​காந்த் பிடிக்​கும் என்று வைத்​துக்​கொள்​ளுங்​கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in