

சந்தை நிலைமை மாறாமல் இருப்பது என்பது அரிதான நிகழ்வே. எனவே, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியோவை சீரமைப்பது அவசியம். இதற்கான ஒரு அணுகுமுறைதான் வணிக சுழற்சி முதலீடு. இது பொருளாதாரத்தின் இயற்கை நிலைகளான மீட்சி, விரிவாக்கம், மந்தநிலை மற்றும் சரிவுடன் போர்ட்போலியோக்களை சீரமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களுடன் இணக்கமாக இருப்பதன் மூலம் முதலீட்டாளர்கள் அபாயங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில் ஈட்டும் வருமானத்தையும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கலாம். வணிக சுழற்சி முதலீடு பொருளாதார கட்டத்துக்கு ஏற்ப போர்ட்போலியோக்களை சரிசெய்கிறது, ஏனெனில் ஒவ்வொரு கட்டமும் வருவாய், தேவை மற்றும் துறை செயல்திறனை வித்தியாசமாக பாதிக்கிறது.