வணிக வீதி
2022-23 நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டிய இந்திய நிறுவனங்கள்
கரோனா தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் பல முன்னணி நிறுவனங்களின் செயல்பாடுகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. புதிய நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மூலமாக தங்களின் வர்த்தக செயல்பாடுகளை எல்லை கடந்து விரிவாக்கிக் கொள்ள இந்திய நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன் விளைவு கடந்த 2022-23 நிதியாண்டில் பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது. இதே நிலை நடப்பு நிதியாண்டிலும் தொடரும் என்பதே பல்வேறு தரவு நிறுவனங்களின் கணிப்பாகும்.
நிகர லாபம் (ரூ.கோடியில்)
தகவல்: கேப்பிட்டலைன்
