

நாளைய உலகின் அன்றாட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முக்கியபங்கு வகிக்கப் போகிறது என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கணிப்பு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் அந்த துறையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
கல்வி, நீதித் துறை என செயற்கை நுண்ணறிவு துறையின் ஆக்டோபஸ் கரங்கள் பரந்து விரிந்து வருகின்றன. ஸ்டான்போர்டு ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் இன்டெக்ஸ் அறிக்கை 2023-ன்படி அந்த துறையில் முதலீடு மேற்கொள்வதில் அமெரிக்காவின் பங்குதான் அதிகமாக உள்ளது. இந்தியா ஏஐ முதலீட்டில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
( 2013 முதல் 2022 வரையிலான முதலீட்டு மதிப்பீடு, பில்லியன் டாலரில்)