

இயற்கை சீற்றம் என்பது இயற்கையால் ஏற்படக்கூடிய பேரழிவு. இதில் மனித உயிர்கள், உடமைகள், மற்ற உயிரினங்கள் என அனைத்துமே பாதிக்கப்படும். முக்கியமாக இயற்கை சீற்றங்களால் ஒவ்வொரு நாடும் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றன. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 320 இயற்கை சீற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பு மிக அதிகம். தற்போதுதான் இந்தியா இயற்கை சீற்ற மேலாண்மைக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து பொருளாதார இழப்புகளையும் மனித உயிர்களையும் காப்பாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய சூழல் உள்ளது. இயற்கை சீற்றங்கள் பற்றியும் அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் பற்றியும் சில தகவல்கள்….
# இயற்கை சீற்றங்களால் ஆண்டுக்கு சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பின் சராசரி மதிப்பு 30,000 கோடி டாலர்
# 2016-ம் ஆண்டு ஆசிய அளவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு 8700 கோடி டாலர்
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஆசிய நாடுகள் (மதிப்பு கோடி டாலரில்)
> இந்தியா – 1431
> வங்கதேசம் – 547
> வியட்நாம் - 265
> எகிப்து - 257
> பாகிஸ்தான் – 173
> மியான்மர் - 57
> ஆப்கானிஸ்தான் - 41
> கம்போடியா - 38
> நேபாளம் - 21
> லாவோஸ் - 15
> மாலி - 13
> ரவாண்டா - 8.9
> தஜிகிஸ்தான் – 8.3
2016-ம் ஆண்டு மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திய இயற்கை சீற்றங்கள் (கோடி டாலரில்)
> நிலநடுக்கம் – ஜப்பான் – 3,800
> வெள்ளம் – சீனா – 2800
> மாத்யூ புயல் – அமெரிக்கா, கரீபியன் தீவுகள் – 1,500
> வறட்சி – சீனா – 600
> வெள்ளம் – ஐரோப்பா – 550
> வறட்சி – இந்தியா – 500
> நிலநடுக்கம் – இத்தாலி – 500
> காட்டுத்தீ – கனடா - 450
அதிக சேதத்தை ஏற்படுத்திய இர்மா
# சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய இர்மா மற்றும் ஹார்வி புயலால் ஏற்பட்ட பாதிப்பு 29,000 கோடி டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
# இதில் 9,000 கோடி டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
# இயற்கை சீற்றங்களால் இந்தியாவின் ஜிடிபியில் ஆண்டுக்கு சராசரியாக 0.84 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது.
# 2011-2014-ம் ஆண்டு காலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் அருணாச்சல பிரதேசம்.
# இந்தக் காலக்கட்டத்தில் வெள்ளத்தால் அருணாச்சலப் பிரதேசத்தில் ஜிடிபி 10 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
# இயற்கை சீற்றங்கள் நடந்து 12 அல்லது 24 மாதங்களுக்குப் பிறகே உண்மையான பொருளாதார இழப்பை கணக்கிட முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கை சீற்றங்கள்
> வெள்ளம் – 50 சதவீதம்
> காற்று மற்றும் சூறாவளி – 29 சதவீதம்
> நிலநடுக்கம் – 9 சதவீதம்
> வறட்சி – 3 சதவீதம்
> நிலச்சரி – 9 சதவீதம்
இந்தியாவில் நடைபெற்ற முக்கிய இயற்கை சீற்றங்கள்
> 1972 - வறட்சி – இந்தியா முழுவதும் - 20 கோடி பேர் பாதிப்பு
> 1977 – புயல் - ஆந்திர பிரதேசம் - 10,000 பேர் உயிரிழப்பு
> 1987 – வறட்சி – 15 மாநிலங்கள் பாதிப்பு – 30 கோடி பேர் பாதிப்பு
> 1993 – நிலநடுக்கம் – மஹாராஷ்டிரா- 7,928 பேர் உயிரிழப்பு
> 1999 – புயல் – ஒரிசா – 10,000 பேர் உயிரிழப்பு
> 2001 - நிலநடுக்கம் – குஜராத் – 13,805 உயிரிழப்பு
> 2004 – சுனாமி – தமிழ்நாடு – 10,479 பேர் உயிரிழப்பு
# சர்வதேச அளவில் 2016-ம் ஆண்டு இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் 26 சதவீதம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
# இயற்கை சீற்றங்களால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் தற்போதை அளவை விட 2020-ம் ஆண்டில் 161 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
# கடந்த ஆண்டு இந்திய பட்ஜெட்டில் இயற்கை சீற்ற பேரழிவு மேலாண்மை துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1009 கோடி.
# முந்தைய 2016-17ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.941.93