நம் சமூகத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதே இலக்கு: ரெக்கிட் நிறுவன சமூக சேவை பிரிவு இயக்குநர் ரவி பட்நாகர் பேட்டி

நம் சமூகத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதே இலக்கு: ரெக்கிட் நிறுவன சமூக சேவை பிரிவு இயக்குநர் ரவி பட்நாகர் பேட்டி
Updated on
2 min read

பிரிட்டனைச் சேர்ந்த ரெக்கிட் பென்கிஷர், சுத்தம் மற்றும் சுகாதாரத் தயாரிப்புகளுக்கு உலகப் புகழ்பெற்ற நிறுவனம். டெட்டால் இந்நிறுவனத்தின் தயாரிப்புதான். ரெக்கிட்நிறுவனம் வெறும் வணிகத்துடன் தன் செயல்பாட்டை சுருக்கிக்கொள்வதில்லை.

சமூக நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை உலக அளவில் அது மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம்போல ‘சுகாதார இந்தியா’ திட்டத்தை அது முன்னெடுத்துள்ளது.

இத்தகைய சமூகப் பணிகளுக்கு இந்நிறுவனத்தின் சமூக சேவை இயக்குநர்ரவி பட்நாகர் மூலக் காரணம். இந்தியாவில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் சமூகச் செயல்பாடுகள் குறித்து அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

ரெக்கிட்டின் சமூக சேவைப் பிரிவு பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா? - பிரிட்டனில் தொடங்கிய ரெக்கிட் நிறுவனத்தின் சமூக சேவை பயணம், தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.இந்தியா, வங்கதேச நாடுகளுக்கான சேவை எனது பொறுப்பில் உள்ளது.

காஷ்மீரில் ஆரம்பித்து அருணாச்சல், சிக்கிம், தமிழகம் என பரந்துவிரிந்து சேவையாற்றி வருகிறோம். மத்திய அரசின் நிதி ஆயோக் பரிந்துரையின்படி சுமார் நூறு மாவட்டங்களில்சமூகசேவையை மேற்கொண்டுள்ளோம். மலைவாழ் பழங்குடியினர் வரை எங்களது சேவை சென்றடைந்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் பிரிவில் தனிகவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக,அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகள் 2.4 கோடி பேர் ரெக்கிட் நிறுவனத்தின் சமூக சேவை திட்டங்களால் பலன் பெறுகின்றனர். இதில், சுமார் 15 சதவீதம் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள். வடகிழக்குமாநிலங்களில் 40 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்காக, ‘தி பேர்ட்ஸ்அண்ட் பீஸ்ட் டாக்’ எனும் சமூகசேவை திட்டத்தை மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து ரெக்கிட் செயல்படுத்தி வருகிறது.

5 லட்சம் மதரஸா குழந்தைகளுக்காகவும் சேவை செய்கிறோம். சுவாமிசின்மயனந்தா சரஸ்வதியுடனும் இணைந்து குருகுலங்களில் சேவையாற்றுகிறோம். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலாயா மற்றும் ராணுவத்தின் சைனிக் பள்ளிக் குழந்தைகளுக்கும் எங்கள் சேவை தொடர்கிறது.

‘சுகாதார இந்தியா’ திட்டத்தின் நோக்கம் என்ன? - சுத்தமும் சுகாதாரமும் ஒருவகை செல்வம்தான். சுத்தம் இருந்தால்தான் சுகாதார இந்தியா உருவாகும். உதாரணமாக, நாம் கழிவறையை சுத்தம் செய்யாமல் நம் கைகளை மட்டும் கழுவி சுகாதாரமாக்குவதில் பலன் இல்லை. இந்த இரண்டையும் இணைந்து செய்ய வேண்டும்.

இதனால், பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய பிறகு அதனுடன் சேர்ந்து சுகாதார இந்தியா திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்தோம். நம் சமூகத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதே எங்கள் இலக்கு. எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பான ஹார்பிக் சுத்தத்தையும், டெட்டால் சுகாதாரத்தையும் முன்னிறுத்துகின்றன.

தமிழகத்தில் உங்கள் நிறுவனம் என்ன விதமான சேவையில் ஈடுபடுகிறது? - இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்களின் பயிற்சிக்காக ஹார்பிக் கல்லூரிகள் 15 இடங்களில் உள்ளன. இதில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் 6 கல்லூரிகள் அமைந்துள்ளன.

இந்த கல்லூரிகள் மூலம், இதுவரை 75,000 சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டு துறை கலைஞர்களுடனும் இணைந்து அவர்கள் வளர்ச்சிக்காகப் பயணிப்பதும் எங்களின் விருப்பம்.

தமிழக அரசுடனும் ரெக்கிட் இணைந்து செய்யும் சேவை குறித்து கூற முடியுமா? - பள்ளிக் குழந்தைகளின் சேவைக்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளோம். ‘டெட்டால் சுகாதாரக் கல்வி’ எனும் திட்டத்தில் குழந்தைகளுக்குசுகாதாரப் பயிற்சிகளை வழங்குகிறோம்.

இதை நேரில் கண்ட முதல்வர் ஸ்டாலின் எங்களது சேவையை பாராட்டியுள்ளார். எங்கள் பணியை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருந்தார்.

தமிழ்நாட்டில் மலேரியா, டெங்கு தடுப்பு பணிகள், சத்துணவு பிரிவிலும் சேவையாற்ற நாங்கள் விரும்புகிறோம். தமிழக அரசுடன் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in