

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், அங்குள்ள கோடீஸ்வர முதலாளிகளுக்கும் இடையே மோதல் தலைதூக்கியுள்ளது. இதனால் தொழிலதிபர்கள் தாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வத்தை
பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் சேர்க்க புதிய இடத்தை தேடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதில், அவர்கள் முன் இருக்கும் எளிய தேர்வு சிங்கப்பூராக உள்ளது.
மோதலின் பின்னணி
அலிபாபா நிறுவனரும், உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா ஷாங்காயில் நடந்த ஒரு மாநாட்டில் பேசும்போது சீன அரசையும், நிதி ஒழுங்குமுறை அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறும்போது “காலத்துக்கு ஏற்றவாறு மாறுவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதற்கும் சீன அரசு தடையாக உள்ளது. உலகின் போக்குக்கு ஏற்ப சீனாவும் தனது பழைய கொள்கைகளை கைவிட்டு புதிய முயற்சிக்கும், தொழில்நுட்பங்களுக்கும் கைகொடுக்க வேண்டும்” என்றார்.
இந்த வெளிப்படையான விமர்சனம் அவருக்கும் அரசுக்கும் இடையில் விரிசல் ஏற்படுவதற்கு காரண
மானது. இதனால், அவரின் பங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டு பல பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.
இந்தக் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ஜாக் மா பொது வெளியில் பல மாதங்களாக தென்படாமல் போனார். சீன அரசால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்க கூடும் என்று கூட விவாதங்கள் கிளம்பின.
ஜாக் மாவை முன்னுதாரணமாகக் கொண்டு மேலும் பல கோடீஸ்வர தொழில் முனைவோர்களிடம் சீனா கடுமை காட்டத் தொடங்கியது. உலக பணக்காரர்கள் வரிசையில் சீனர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெய்ஜிங் மட்டுமின்றி கோடீஸ்வர தொழிலதிபர்கள் சீனா முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். சீன அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் அலிபாபா நிறுவனருக்கு 25 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. இது, பிற கோடீஸ்வர முதலாளிகளுக்கு பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி இதேபோன்ற அழுத்தத்தை தங்கள் மீதும் எப்போதும் வேண்டுமானாலும் திணிக்
கலாம் என்ற ஒருவித பயத்துடனேயே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அரசு நினைத்தால் தங்களது தொழிலை எந்த நேரத்திலும் குறைந்த விலைக்கு கையகப்படுத்தி விடலாம் என்ற கவலை தொழிலதிபர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தினமும் பயந்து நடுங்குவதைவிட சிங்கப்பூரில் குடியேறினால் குடும்பச் செல்வத்தை பல தலைமுறை
களுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கலாம். அத்துடன் தங்களது தொழிலையும் மன அமைதியுடன் முழு ஈடுபாட்டுடன் செய்யலாம் என்ற எண்ணம் சீன கோடீஸ்வரர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி வருகிறது.
பூஜ்ய கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவது அங்குள்ள சீன தொழிலதிபர்களிடையே கவலையை மேலோங்கச் செய்துள்ளது. சீன கோடீஸ்வரர்கள் பலர் வெளிநாட்டில் குடியேறும் முடிவில் உறுதியாக இருப்பதற்கு இதுவும் காரணம் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேர்வு ஏன்?
ஆசியாவின் பெரிய நிதி மையமாக விளங்கும் சிங்கப்பூரில் தொழில் தொடங்குவதற்கு அந்த நாட்டு அரசு எல்லாவித உதவிகளையும் வழங்கி பட்டுக்கம்பள வரவேற்பினை அளிக்கிறது.
மக்களின் செல்வாக்கு பெற்று கடந்த 6 தசாப்தங்களாக அரசியல் நிலைத்தன்மையுடன் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதும் உலக முதலீட்டாளர்களை சிங்கப்பூர் கவர்வதற்கு முக்கிய காரணம். போரட்டங்களோ நடைபெறுவதில்லை. இதுவும், தொழில் சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டங்களோ, சாலை மறியல் முனைவோருக்கு மிக சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வரி விதிப்புகளும் குறைவான அளவில் இருப்பது சீன முதலீட்டாளர்களை பெரிதும் கவர்ந்திழுக்க காரணமாகியுள்ளது.
மேலும், பண்பாட்டு, கலாச்சார ரீதியாக ஒன்றிணைந்த சீன வம்சாவளியினர் சிங்கப்பூரில் பெரும்
பான்மையாக இருப்பதால் சீன முதலீட்டாளர்களின் தேடல் வேறு இடங்களை நோக்கி திரும்ப
வில்லை.
சிங்கப்பூரை பொருத்தவரையில், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் தனது உறவுகளை சாமர்த்தியமாக நிர்வகித்து வருகிறது. சீனாவுடன் வலுவான வர்த்தக உறவுகளையும், அமெரிக்காவுடன் நெருக்க
மான பாதுகாப்பு உறவுகளையும் சிங்கப்பூர் கடைபிடித்து வருகிறது. சீனாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்களை சிங்கப்பூர் கவர்ந்திழுப்பதற்கு இதுபோன்ற ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும் பெரும் பங்குண்டு.