பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் 2023 மார்ச் வரை இணையலாம்

பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் 2023 மார்ச் வரை இணையலாம்
Updated on
1 min read

பிரதமரின் வய வந்தனா யோஜனா (பிஎம்விவிஒய்) திட்டம், கடந்த 2017-ல் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தால் (எல்ஐசி) அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2020 மார்ச் வரை முதலில் அமலில் இருந்தது. பின்னர் வரும் 2023 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 வயதை கடந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையை ஒரே தவணையாக பிரீமியம் செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம். இத்திட்டத்தில் சேர்ந்ததும் ஓய்வூதியம் பெறலாம். அதன் பிறகு, செலுத்திய தொகைக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதிய பலன்களைப் பெறலாம். 10 ஆண்டு கால முதிர்வுக்குப் பிறகு செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்படும். இடையில் பாலிசிதாரர் உயிரிழக்க நேரிட்டால் முழு தொகையும் வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.

கடன் வசதி: பாலிசி காலம் தொடங்கிய 3 ஆண்டு நிறைவுக்குப் பிறகு, செலுத்திய பிரீமியத்தில் அதிகபட்சம் 75% வரை கடன் பெறலாம்.பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தில் 2023 மார்ச் வரை இணையலாம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in