

சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய பொரு ளாதார வளர்ச்சியில் பல்வேறு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக துறைவாரியான லாபம் அதிகரித் துள்ளதாக ஒரு ஆய்வு சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்தியாவின் துறைவாரியான லாபத்தை கொடுப்பதில் தகவல் தொழில்நுட்பத் துறையே முதலிடத்தில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டின் துறைவாரியான லாபத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் பங்கு 26.1 சதவீதம்.
2015-ம் ஆண்டு துறைவாரியான லாபம்
தகவல் தொழில்நுட்பத் துறை - 26.1%
ஹெல்த்கேர் - 11.5%
ஆட்டோ மொபைல் - 16.2%
ஆட்டோ உதிரி பாகங்கள் - 6.1%
எரிசக்தி - 14.9%
தொலைத் தொடர்பு - 3.2%