ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ப்ரீடம் எஸ்ஐபி

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ப்ரீடம் எஸ்ஐபி
Updated on
2 min read

நம்மில் பெரும்பாலானோர் நிதி சுதந்திரத்தை விரும்புகிறோம். அதேபோன்று, சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும் என்பது பலரின் இலக்குப் பட்டியலில் ஒரு முக்கிய ஆசையாக இடம்பெற்றுள்ளது. ஓய்வுக்கான நிதி கட்டமைப்பை உருவாக்க ஒரு முதலீட்டாளருக்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பங்கு சார்ந்த நிதியத்தில் நீண்ட கால எஸ்ஐபி (முறையான சேமிப்பு திட்டம்). நாம் வேலையில் இருக்கும் நாட்கள் வரை இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். சேமிப்பு நடவடிக்கையில் இது ஒரு எளிய வழிமுறையாகும்.

இதில் கஷ்டப்பட்டு சேமிக்கப்படும் தொகையை பாதுகாப்பது மிக முக்கியம். அதேநேரம்,நாம் ஓய்வுபெறும் காலகட்டத்தில் இதிலிருந்து வருமானம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் பல்வேறு படிநிலைகளில் இந்த நிதியை நிர்வகிப்பது என்பது சவாலான பணியாக இருக்கும்.இந்த நேரத்தில், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ப்ரீடம் எஸ்ஐபி திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

ப்ரீடம் எஸ்ஐபி என்றால் என்ன? - ப்ரீடம் எஸ்ஐபி என்பது ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் மற்றும் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் ஆகியவற்றின் கலவையாகும், இது, முதலீட்டாளர்கள் தாங்கள் திட்டமிட்ட ஓய்வூதிய இலக்குகளை தடையற்ற வகையில் அடைய உதவுகிறது. இந்த எஸ்ஐபி திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் 8 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 12ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் என தங்களது வசதிக் கேற்ப சேமிப்பு காலத்தை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.

பொதுவாக, முதலீட்டாளர்கள் நீண்டகால எஸ்ஐபி திட்டங்களை தேர்ந்தெடுக்கும்போது அவை பங்கு சார்ந்த திட்டங்களாகவே இருக்க வேண்டும். எஸ்ஐபி காலம் முடிந்ததும், அந்த தொகை கடன் சார்ந்த, ஹைபிரிட் சார்ந்ததிட்டங்களுக்கு மாற்றப்படும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திலிருந்து உருவாக்கப்பட்ட சேமிப்பை பாதுகாக்கும் நோக்கத்தின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் பிறகு, முறையான திரும்பப்பெறுதல் திட்டம் (எஸ்டபிள்யூபி) இந்த நிதியிலிருந்து தொடங்கி யூனிட்கள் கிடைக்கும் வரை தொடர்கிறது. எஸ்டபிள்யூபி-யை பொறுத்தவரை மாதாந்திர எஸ்டபிள்யூ தொகையானது ஆரம்ப எஸ்ஐபி தொகையின் பெருக்கமாக இருக்கும். இது, ஒரு மடங்கு முதல் 3 மடங்கு வரையில் இருக்கலாம். 8 ஆண்டுக்கான எஸ்ஐபி காலத்துக்கு மாதாந்திர எஸ்டபிள்யூபி தவணை 1 மடங்காக இருக்கும். அதேபோன்று,10, 12, 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு, எஸ்டபிள்யூபி தவணை முறையே 1.5 மடங்கு, 2 மற்றும் 3 மடங்காக ஆக இருக்கும். எடுத்துக்காட்டாக: 15 வருட காலத்திற்கு பதிவுசெய்யப்பட்ட ஆரம்ப எஸ்ஐபி மாதம் ரூ.10,000 என்றால் எஸ்டபிள்யூபி ரூ.30,000 (3Xரூ.10,000) ஆக இருக்கும்.

வழக்கமான எஸ்ஐபி ஐ விட ப்ரீடம்எஸ்ஐபி-யின் நன்மைகள்

# லாக்-இன் பீரியட் உள்ளது

# நியாயமான வருமானத்தை உருவாக்கும்

# தானியங்கி எஸ்டபிள்யூபி

இறுதியாக, ப்ரீடம் எஸ்ஐபி என்பது ஒருவரின் வாழ்க்கையில் தானாக சேமிக்கவும், ஓய்வுக் கட்டத்தில் அதனை திரும்பப் பெறுவதையும் தாமாக உதவும் ஒரு வசதி. மேலும், உங்கள் அன்றாட தேவைகளை சவுகரியமாக பூர்த்தி செய்ய பணப்புழக்கத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்கணிப்பு செய்வதும் இந்த திட்டத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். - டி. சற்குணன், இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சர்குன் னான்சியல் சர்வீசஸ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in