

ஏற்ற, இறக்கம் நிறைந்த சந்தையில் முதலீட்டாளர்களின் கவலை ஒன்றுதான். நமது முதலீட்டு தொகுப்பு எவ்வாறு செயல்படும் என்பதே அது. பொதுவாக சந்தை வீழ்ச்சியை முதலீட்டாளர்கள் தங்களது சிறப்பான முதலீட்டு தொகுப்பை உருவாக்குவதற்கான சிறந்த தருணமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அப்போதுதான் குறைந்த விலையில் நீங்கள் அதிக சொத்துகளில் முதலீடு செய்ய முடியும். அதன் மூலமாக கிடைக்கக்கூடிய அதிக பலனையும் நீங்கள் அனுபவிக்க முடியும். சந்தையின் சரிவில் உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் அதிக யூனிட் சொத்துகளை சேர்ப்பதன் மூலம் சந்தை ஏற்றத்தின்போது அதிக வருவாய் ஈட்ட முடியும். தற்போதைய காலகட்டத்துக்குத் தேவையான துறையை தேர்வு செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும். நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், போக்குவரத்து-சரக்கு போக்குவரத்து என முக்கியமான துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகுப்புகளை உருவாக்கலாம்.
சரக்குப் போக்குவரத்து துறைக்கு முக்கியத்துவம் ஏன்?
பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக போக்குவரத்து மற்றும் சரக்குப்போக்குவரத்து துறை விளங்குகிறது. அதன் முக்கியத்துவம் உணர்ந்தே சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகளை புதிதாக உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இன்றைய பொருளாதார காலகட்டத்தில் ஆட்டோ உபகரண உற்பத்தியாளர்கள் (2-வீலர், 3-வீலர், டிராக்டர் உள்பட), பேட்டரி, எலக்ட்ரானிக்ஸ், டயர் தயாரிப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி இன்றியமையாததாக உள்ளது. மேலும், விநியோகச் சங்கிலியை உறுதி செய்ய ரயில், கப்பல்களுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் பணிகளும் அத்தியவசியமானதாகவே கருதப்படுகிறது. எனவே, இந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் எதிர்கால வளர்ச்சி என்பது ஒளிமயமாகவே காணப்படுகிறது.
எனவே, இதுபோன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் முதலீட்டு தொகுப்பை மேலும் வலுப்படுத்த உதவும். இதுபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொண்டுதான், ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஏஎம்சி, டிரான்ஸ்போர்ட்டேஷன் & லாஜிஸ்டிக்ஸ் ஃபண்டை முதலீட்டாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஃபண்ட் திட்டத்தில் (என்எஃப்ஓ) அக்டோபர் 20-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.