பெருகிக் குறையும் நிறுவனங்கள்

பெருகிக் குறையும் நிறுவனங்கள்
Updated on
1 min read

கரோனாவிலிருந்து உலகம் மீண்டுள்ள நிலையில் பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரித்து இருக்கின்றன. இவ்வாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையில் இந்தியாவில் 90,051 நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் உச்சபட்ச எண்ணிக்கை ஆகும். 2021-ல் 78,533 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டன.

பல்வேறு துறைகளில் புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகுவதால், பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ஏற்கனவே நிறுவனம் நடத்திவருபவர்கள், ஜிஎஸ்டி நடைமுறையின் பொருட்டு, பெயரளவில் புதிய நிறுவனங்களை தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

நடப்பு ஆண்டில் நிறுவனங்களின் பதிவு மட்டும் அதிகரிக்கவில்லை, நிறுவனங்களின் மூடலும் அதிகரித்து இருக்கிறது. 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 59,560 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தின் நிலவரத்துடன் ஒப்பிடுகையில் இது 522 சதவீதம் அதிகம் ஆகும்.சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 9,563 நிறுவனங்கள் மூடப்பட்டன.

2022 ஜூன் நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 23.6 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் 14.8 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.8 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. டெல்லியில் 2.24 லட்சம், மேற்கு வங்கத்தில் 1.33 லட்சம், உத்தரப் பிரதேசத்தில் 1.11 லட்சம், கர்நாடகாவில் 1.01 லட்சம், தமிழ்நாட்டில் 97 ஆயிரம் நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in