

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் ஆபாசம், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம் உள்ளிட்ட தன்மைகளைக் கொண்டிருந்த 22 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது.
இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட 25 லட்சம் பதிவுகளை (எழுத்து, போட்டோ, வீடியோ) பேஸ்புக் நீக்கியுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் 6.19 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் சார்ந்து புதிய விதிகளைக் கொண்டுவந்தது.
அதாவது அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம், ஆபாசம், சமூக பிளவைத் தூண்டுதல் உள்ளிட்ட தன்மைகளைக் கொண்ட பதிவுகளை சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
அதேபோல் பயனாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு 15 நாட்களுக்குள்அந்நிறுவனங்கள்தீர்வு வழங்க வேண்டும். மட்டுமில்லாமல், புகார்கள் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விதியின் கீழ்தான் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுத்துள்ளன.