

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2016-ல் இந்தியாவில் 471 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன.
தற்போது 75 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலமாக 7.46 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மொத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 12 சதவீதம் ஐடி துறையிலும், 9 சதவீதம் உடல்நலம் தொடர்பான துறையிலும், 7 சதவீதம் கல்வித் துறையிலும் 5 சதவீதம் வர்த்தக சேவை துறையிலும் 5 சதவீதம் வேளாண் துறையிலும் உள்ளன.
2022 ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் 102 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படுகின்றன. யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.