

பல அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இருப்பது நமக்கெல்லாம் பரிச்சயமான விஷயம்தான்.இது ஸ்டார்ட்அப் யுகம்.
இதிலும் இந்தியர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களாக பல இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்க யுனிகார்ன் நிறுவனங்களில் 66 நிறுவனங்கள் இந்தியர்களால் நிறுவப்பட்டவை.
வெளிநாட்டு நிறுவனர்களால் நிறுவப்பட்ட அமெரிக்க யுனிகார்ன்கள் குறித்த விவரங்களைஅமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை (National Foundation for American Policy) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்வதைப் பார்க்கலாம்.