இந்தியாவில் ஆஸ்டின் மார்டின்!

இந்தியாவில் ஆஸ்டின் மார்டின்!
Updated on
1 min read

ஆஸ்டின் மார்டின் காரைப் பற்றியோ அதன் பிராண்டு பெயரைப் பற்றியோ பெரும்பாலானோ ருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கார் என்றால் அனைவரது நினைவுக்கும் வந்துவிடும்.

சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிரிட்டனின் ஆஸ்டின் மார்டின் நிறுவனம் தனது புத்தம் புதிய டிபி 11 மாடல் காரை இந்தியாவில் அக்டோபர் 8-ம் தேதி கொண்டு வந்தது. நிதிச் சந்தை தலைநகராகத் திகழும் மும்பையில் இது காட்சிப்படுத்தப்பட்டது. அடுத்து புணே, கோவா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என இதன் பயணம் தொடர்கிறது.

டிபி 11 மாடல் கார் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடை பெற்ற 86-வது சர்வதேச வாகன கண் காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட் டிருந்தது. இதன் விலை ரூ. 4.5 கோடியாக இருக்கும் என தெரிகிறது.

நிறுவனத்தின் இரண்டாம் நூற்றாண்டு திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது கார் இதுவாகும். இந்த கார்கள் இந்த ஆண்டின் இறுதியில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.2 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ் வி 12 இன்ஜின் உள்ளது. இது 600 பிஹெச்பி சக்தியை 700 நியூட்டன் மீட்டர் டார்க் திறனைக் கொண்டதாக உள்ளது. இதனால் 4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டலாம். இதில் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

சொகுசு கார் உற்பத்தியில் 103 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆஸ்டின் மார்டின் நிறுவனத்தின் பெருமைகளை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கார் அமையும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி பால்மர் தெரிவித்துள்ளார். ஆட்டோமோடிவ் சந்தையில் மிகச் சிறந்த சொகுசு காராக இது இடம்பெறும்.

டெய்ம்லர் நிறுவனத்துடன் இணைந்து நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 12 அங் குல டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே, வாகனத் தின் அனைத்து சிறப்பம்சங்களையும் விளக்கும் வகையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகத் திகழும்.

திரைப்படங்களில் ஜேம்ஸ்பான்ட் நாயகனின் சாகசங்களுக்கு துணை நிற்கும் ஆஸ்டின் மார்டின் நிறுவனத்தின் புதிய மாடல் காரைக் காணும் வாய்ப்பு சில நகர வாசிகளுக்கும், இதை வாங்கிப் பயன்படுத்தும் வாய்ப்பு கோடீஸ்வரர்களுக்கும் வசப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in