சொத்து ஒதுக்கீட்டு நிதியத்தில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

சொத்து ஒதுக்கீட்டு நிதியத்தில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
Updated on
2 min read

முதலீடுகளை மேற்கொள்ளும்போது சில அடிப்படையான விஷயங்களை முதலீட்டாளர் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும். பங்குச் சந்தையின் போக்கு எப்படியிருப்பினும் அடிப்படை அணுகுமுறையில் மாற்றம் இருக்கக் கூடாது. இப்படியான அடிப்படை காரணிகளில் ஏதேனும் ஒன்று புறந்தள்ளப்பட்டாலும் நீங்கள் நிர்ணயித்த நிதி இலக்கை உங்களால் எட்ட முடியாமல் போகலாம்.

இதில் மிகவும் முக்கியமான அடிப்படை காரணியாக முதலீட்டின்போது பார்க்கப்படுவது சொத்து ஒதுக்கீடாகும். இத்தகைய ஒதுக்கீட்டில் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டால் முதலீட்டாளர் பலனடைவதோடு முதலீடுகளும் பரவலாக்கப்பட்டிருக்கும். இதனால் பரவலாக ஸ்திரமான வருமானம் கிடைக்கும். இதனால் முதலீடு சார்ந்த தேவையற்ற மன அழுத்தம் உருவாக வாய்ப்பில்லாமல் போகும்.

முதலீட்டில் மிக முக்கியமான மந்திரச் சொல்லே, அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள் என்பதாகும். இது
முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான உவமையாகும். பரந்துபட்ட முதலீட்டு வாய்ப்புகள் அதாவது சொத்து ஒதுக்கீடு, அதற்கான உத்திகளை முதலீட்டாளர் வகுப்பது அவசியம். சொத்து ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில், ஒரு முதலீட்டாளர் அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் அவரது முதலீடானது பல்வேறு நிதி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய அணுகுமுறை எந்த சந்தர்ப்பத்திலும் மாறவே கூடாது. இதன் விளைவாக சொத்து ஒதுக்கீட்டானது மிகவும் முக்கியமான முதலீடு சார்ந்ததாக இருக்கும். இவ்விதம் பல்வேறு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம், குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் அவரது சொத்து முதலீடு இருக்கும். அது அவரது முதலீட்டுத் திட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது.

மேலும் முதலீட்டாளர்கள் சொத்து ஒதுக்கீடு மேற்கொள்ளும்போது அவர் பங்குச் சந்தை நிலவரம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போதுதான் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. முதலீட்டாளர் தனது மொத்த முதலீட்டையும் பங்கு நிதியங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக அளவிலான லாபம் ஈட்ட முடியும். சில பல சமயங்களில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்த நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன.

ஆனால் இவர்கள் அனைவரும் மிகவும் நஷ்டத்துடனே வெளியேறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இவர்கள் எல்லாம் முறையாக சொத்து ஒதுக்கீட்டை மேற்கொண்டிருந்தால் இத்தகைய நஷ்டத்தை தவிர்த்திருக்க முடியும். பங்குச் சந்தையில் கடுமையான சரிவு ஏற்பட்ட 1994, 1999 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் சொத்து ஒதுக்கீட்டை மிகச்சிறப்பாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் அனைவரும் மிகப் பெரும் லாபம் ஈட்டியவர்கள் என்பதை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

முதலீட்டுக்கான தீர்வுகள்

சொத்து முதலீடு என்ற அணுகுமுறையானது, அடிப்பையில் மிகவும் எளிதானது. ஆனால் இதை அனைத்து சந்தர்ப்பங்களிலும் சரிவர எடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். ஒரு முதலீட்டாளர் தனது நிதி நிலைக்கேற்ப சொத்து ஒதுக்கீடுகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது.

இதை உறுதிபட மேற்கொண்டால் அதுவே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்கு நிதி நிறுவனங்கள் பல்வேறு சொத்து நிர்வாக திட்டங்களை வரையறுத்துள்ளன. இவ்வித முதலீடுகளில் ஒன்றாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் சொத்து ஒதுக்கீட்டு நிதியமும் உள்ளது. இதைத் தேர்வு செய்வதன் மூலம் நிர்ணயித்த நிதி இலக்குகளை எட்ட முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in