

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. மூன்று பொருளாதார காரணிகள் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. முதலாவதாக அமெரிக்காவில் உச்சம் தொட்டிருக்கும் பணவீக்கம்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பணவீக்கம் உயரும்போதெல்லாம் கடன் பத்திரங்களின் மீதான முதலீடு அதிகரிக்கும். இதனால் டாலருக்கான தேவை அதிகரிக்கும்.இரண்டாவதாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் இவ்வாண்டு மார்ச்சிலிருந்து வட்டியை 150 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா மட்டுமில்லாமல், மேற்கத்திய மத்திய வங்கிகளும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது மூன்றாவது காரணமாகும். முன்னதாக இந்த நாடுகளில் குறைந்த வட்டியில் கடன் எளிதாகக் கிடைத்ததால் பலரும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தனர். கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் கரன்சிகளிலும் முதலீடு செய்தனர். தற்போது கடன் பத்திரங்கள் மற்றும் மெய்நிகர் கரன்சிகளின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கிரிப்டோ கரன்சிகளின்மதிப்பு சரிந்துள்ளன. இதனால் பெரும்பாலானோர் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து டாலரின் மதிப்பை உயர்த்தியது.
இந்திய ரூபாயில் ஏற்படுத்திய தாக்கம் டாலர் விலை ஸ்திரமடையும்போது அதை ஏற்று அதன்படி ரூபாயை கணக்
கிட்டு அளிக்க வேண்டிய நிலையில்தான் இந்தியா உள்ளது. ஏனெனில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 85 சதவீத தொகை டாலர் மூலமாகத்தான் வழங்கப்படுகிறது. மேலும் இந்திய ஏற்றுமதி மதிப்பை விட இறக்குமதி மதிப்பு அதிகமாக உள்ளது. டாலர் நிலை ஸ்திரமடையும்போது இந்தியாவின் இறக்குமதி தொகை அதிகரிக்கும், இதனால் உள்நாட்டில் டாலருக்கான தேவை அதிகரிக்கும்.
அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறும்போது உள்நாட்டில் டாலருக்கான தேவை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமடையச் செய்துவிடும். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் டாலர் மதிப்பு ஸ்திரமடையும்போது இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து பற்றாக்குறை அதிகரிக்கும். இந்த இடைவெளி கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கும்போது பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். இந்தியா இறக்குமதி செய்யும் பல அத்தியா வசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இது உள்நாட்டில் பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கிறது. தற்போதைய டாலர் விலையேற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்திய நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆர்பிஐ எப்படி சமாளிக்கும்?
ரூபாய் மதிப்பு சரியும்போது ரிசர்வ் வங்கி இரண்டு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு சரிவைத் தடுக்க முயலும்.
முதலாவதாக வட்டி விகிதத்தை உயர்த்தும். வட்டி விகித உயர்வால் இந்திய கடன் பத்திரங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் கடன் பத்திரங்களிலிருந்து வெளியேறும் முடிவை அன்னிய முதலீட்டாளர்கள் மறு பரிசீலனை செய்வர். அல்லது நிலைமையை சமாளிக்க கைவசம் உள்ள மிகப் பெருமளவிலான அன்னிய செலாவணி கையிருப்பை கரன்சி சந்தையில் புழக்கத்துக்கு விடும்.பல்வேறு வகைகளில் டாலர் சந்தையில் மிக எளிதாகக் கிடைப்பதற்கான வழிவகைகளை ஆர்பிஐ மேற்
கொள்ளும். இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் கோடி டாலர் வரை விடுவித்து ரூபாயின் மதிப்பை ஸ்திரப்படுத்த ஆர்பிஐ முயற்சித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடர்வது, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றால் பங்குச்
சந்தையிலிருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறைவதற்கான அறிகுறிகள் இப்போதைக்கு தென்
படவில்லை. போர் நிறுத்தம் ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விலை குறைந்து அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை
யிலிருந்து வெளியேறுவது குறையும் போது பங்குச் சந்தை ஸ்திரமடையும். ரூபாயின் மதிப்பும் உயரும்.
கட்டுரையாளர்:
ஆர்த்தி கிருஷ்ணன்
டெபுடி எடிட்டர், பிசினஸ் லைன்.
தொடர்புக்கு: aarati.k@hindu.co.in