

தன்னைச் சுற்றியுள்ள மக்கள் வளமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பெரும் செல்வந்தர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கும் நடைமுறை பன்நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் இருந்து வருகிறது. நவீன காலத்தில் சமூக மேம்பாட்டுக்காக வாரி வழங்கும் வள்ளல்களாக பல தொழிலதிபர்கள் விளங்குகின்றனர்.
ஆசிய பெரும் பணக்காரர்கள் என அடிக்கடி பட்டியலில் தோன்றும் பல இந்திய தொழிலதிபர்கள் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து அதன் மூலம் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உதவிக்காகவும், ஆக்சிஜன் உபகரணங்கள் வாங்கவும் தொழிலதிபர்கள் மிகவும் தாராளமாக உதவியதை நாம் பார்த்தோம்.
அந்த வரிசையில் சமீபத்தில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தொழிலதிபர் கவுதம் அதானி. தனது 60-வது பிறந்தநாள் மற்றும் தந்தையின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.60 ஆயிரம் கோடியை நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சர்யமூட்டினார்.
கடந்த ஆண்டு இவரது குடும்பம் வழங்கிய தொகை ரூ.130 கோடி. இந்திய தொழிலதிபர்களில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவோரில் அஸிம் பிரேம்ஜி முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் 2021-ல் எவ்வளவு நன்கொடை வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
ரூபாய் கோடியில்