

1 பில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இ-காமர்ஸ், கல்வி, நிதிப்பரிவர்த்தனை, மருத்துவம் என பல துறைகளில் 102 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. 2021 முதல் 2022 ஜுன் வரையில் மட்டும் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்தன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் நாட்டின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன. இந்தத் தருணத்தில் இந்தியாவின் யுனிகார்ன் சூழலைப் பார்க்கலாம்.
யுனிகார்ன் நகரங்கள்
* பெங்களூரு - 39
* மும்பை - 32
* டெல்லி - 16
முன்னணி துறைகள்
* இகாமர்ஸ் - 23
* ஃபின்டெக் -21
இந்தியாவின் டாப் 4 யுனிகார்ன்
* பிளிப்கார்ட் - 37 பில்லியன் டாலர்
* பைஜூஸ் -18 பில்லியன் டாலர்
* இன்மொபி - 12 பில்லியன் டாலர்
* ட்ரீம் 11 - 8 பில்லியன் டாலர்
* போன்பே - 8 பில்லியன் டாலர்
தமிழ்நாட்டு யுனிகார்ன்
1. சோஹோ ZOHO
2. க்ரெட்அவன்யூ CredAvenue
3. யுனிஃபோர் Uniphore
4. ஃபைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் Five Star Business Finance
5. சார்ஜ்பீ Chargebee
6. ஃபிரெஷ்வொர்க்ஸ் freshworks