

தியேட்டருக்கு போய் யார் படம் பார்க்கிறார்கள், எல்லா தியேட்டர்களும் கல்யாண மண்டபங்களாகி வருகின்றன என்பது போன்ற புலம்பல்களை நம்மில் பலர் கேட்டிருக்க கூடும். ஆனால் தியேட்டர் இப்போது முக்கிய சந்தையாகி வருகிறது. இந்தியாவில் பெரிய திரையரங்கு நிறுவனங்களாக பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவெல் ஆகிய நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் இன்னும் ஒரு வருடத்தில் 300 திரைகளை கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றன.
ஏன் போட்டி?
பொதுவாக எந்த துறையிலும் பெரிய நிறுவனங்கள் அதிக சந்தையை வைத்துக்கொள்ள திட்டமிடுவார்கள். இங்கு அதிக திரைகளை வைத்திருக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதிக திரையரங்குகள் இருக்கும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு பல வகையில் லாபம் என்பதால்தான் இந்த போட்டியில் இறங்கியுள்ளன. மற்ற துறையை போல நாம் நினைக்கும் இடத்தில் தியேட்டர் கட்ட முடியாது என்பதுதான் இந்த துறையில் உள்ள முக்கிய சிக்கல். மால்கள் இருக்க வேண்டும். அந்த இடத்தில் வசதி இருக்க வேண்டும், அங்கு தியேட்டர் அமைக்க போதுமான இடம் வேண்டும் என பல விஷயங்களை முடிவு செய்துதான் தியேட்டர் அமைக்க முடியும். தவிர ரியல் எஸ்டேட்டில் மந்த நிலை இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புதிதாக மால் அமைக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை.இதனால் புதிய தியேட்டர் அமைப்பதோடு, இருக்கும் தியேட்டர்களை வாங்கு வதிலும் இந்த நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த துறையில் பல கையகப்படுத்தல்கள் நடந்திருக் கின்றன. பிக் சினிமாஸ் நிறு வனத்தை கார்னிவெல் கையகப் படுத்தியது, சினிமேக்ஸ் நிறுவனத்தை பிவிஆர்-ம், பேம் சினிமாஸை ஐநாக்ஸும், ஃபன் சினிமாஸை மெக்ஸிகோவை சேர்ந்த சினிபோலிஸ் நிறுவனமும் கையகப்படுத்தின. இப்போது இந் திய மல்டிபிளக்ஸ்களில் பெரும் பான்மையான சந்தையை பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவெல் மற்றும் சினிபோலிஸ் ஆகிய நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
என்ன தேவை?
பொதுவாக வளர்ந்த நாடுகளை அடிப்படையாக வைத்து இந்த துறையின் இந்திய தேவையை கணக்கிடுவது வழக்கம். உதாரணத்துக்கு அமெரிக்காவில் 40,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன. சீனாவில் கூட 20,000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள மொத்த திரையரங்குகளின் எண்ணிக்கையே தோராயமாக 8,000 தான். இதில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 2,000 மட்டுமே. அதனால் இந்த எண்ணிக்கை இன்னும் சில பல ஆண்டுகளில் 7,500க்கு மேலே அதிகரிக்கும் என்று கணிப்புகள் சொல்கின்றன. 1990களின் இறுதியில்தான் மல்டிபிளக்ஸ் என்னும் கான்செப்ட் இந்தியாவுக்கு வந்தது. இப்போது 2,000 மல்டிபிளெக்ஸ் திரைகள் உள்ளன. இவை மேலும் அதிகமாகும் என்பதால் சந்தையை கைப்பற்ற போட்டி நடக்கின்றது.
சந்தைப் போட்டியை மேலும் சூடாக்க சீனாவை சேர்ந்த டேலியன் வாண்டா (Dalian Wanda) குழுமம் இந்தியாவில் திரையரங்குகளைக் கையகப்படுத்த திட்டமிட்டிருப்ப தாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் அதிக திரைகளை வைத்திருக்கும் இரண்டாவது (சுமார் 4,950 திரை கள்) பெரிய நிறுவனமாகும். பிவிஆர், கார்னிவெல் ஆகிய நிறு வனங்களைக் கையகப்படுத்த பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டிருக் கிறது. சீன நிறுவனம் தொடர்பு கொண்டது உண்மை என்றும் தெரிய வந்திருக்கிறது. சர்வதேச அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கட்டும்.