

கரோனா காலகட்டத்தில் பங்குச் சந்தையில் நுழைந்தவர்கள் 2020-ம் ஆண்டில் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு சவால்களை தங்களது முதலீட்டில் எதிர்கொண்டனர் என்றால் அது மிகையல்ல. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பங்குச் சந்தையில் மிகப் பரவலாக 10 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் நிக்கெல் உலோகத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையான நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை இருந்தது.
செமிகண்டக்டர்களுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாடு ஆட்டோமொபைல் துறையை முடக்கிப்போட்டது. அதற்கு முன்பு கரோனா பரவல் தீவிரமாயிருந்த காலத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையான சரிவை எதிர்கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் ரியல்எஸ்டேட் நிறுவன பங்குகளும் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தன. இவை அனைத்துமே சிறு உதாரணங்கள்தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எத்தகைய மாற்றங்களை, பாதிப்பை குறிப்பிட்ட துறைகளில் ஏற்படுத்துகிறது என்பதை குறிப்பிடத்தான். அதேசமயம் இத்துறைகளில் நிகழ்ந்த மாற்றங்களின் சாதக அம்சங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்துவதும்தான்.
இதன் மூலம் குறிப்பிட்ட செயல்பாடுகளை கணித்து அதன் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசிமானது. இதன் மூலம் குறிப்பிட்ட துறைகளின் சாதக அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்தகைய வாய்ப்புகளை உணர முடியாதவர்கள், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நிதி ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்வதன் மூலம் வாய்ப்புகளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும்.
சிறப்பு சூழல்களில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள்
சிறப்பு சூழல்கள் என்பது புவிசார் அரசியல் அல்லது மற்றும் சமூக பொருளாதார நிகழ்வு, நிறுவன சீரமைப்பு, அரசு கொள்கை அல்லது கட்டுப்பாட்டு அமைப்புகள் செய்யும் மாற்றங்கள் அல்லது பிரத்யேகமான தற்காலிக சவால் அதாவது குறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கானதாகும். இதுபோன்ற சூழலில் நிதி ஆலோசகர்கள் 360 டிகிரி கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப சந்தை வாய்ப்புகளில் சாதகமான சூழலை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்வர்.
ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு மற்றும் அது சரிவை சந்திக்கும்போது வாங்குவது உள்ளிட்டவற்றில் அதிக கவனமாக செயல்படுவர். இத்தகைய பங்கு விலை சரிவானது மேலே குறிப்பிட்ட காரணிகளில் ஏதாவது ஒன்றால் ஏற்பட்டதாகும். சில நிதித் திட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதேபோல வெளியேறவும் முடியும். இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் பன்முக முதலீடுகளை மேற்கொள்பவையாகும்.
எப்படி முதலீடு செய்யலாம்
முதலீடு செய்யும் முன்பு குறிப்பிட்ட நிதியத்தை நிர்வகிக்கும் நிதி ஆலோசகர்களின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய வேண்டும். கடந்த காலங்களில் இவர்கள் மேற்கொண்ட முதலீடுகள் எத்தகைய ஆதாயத்தை ஈட்டித் தந்தன என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் முதலீடு செய்யப்போகும் நிதி திட்டங்கள் குறித்தும் அதை நிர்வகிக்கும் நிதி ஆலோசகர்கள் குறித்தும் தெளிவான சிந்தனை உருவாக வழியேற்படுத்தும். இது போன்ற முதலீட்டு திட்டங்களை ஆராயும்போது தற்போது முதலீட்டாளர்களுக்கு உள்ள வாய்ப்புகளில் ஐசிஐசிஐ புரூடன்ஷியல் நிதித் திட்டமும் ஒரு சிறந்த திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.