ஜிக்ஸர்’ தினம் கொண்டாடும் சுஸுகி

ஜிக்ஸர்’ தினம் கொண்டாடும் சுஸுகி
Updated on
1 min read

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துட னான கூட்டணியை முறித்துக் கொண்டு இந்தியாவில் தன்னிச் சையாக கிளை பரப்பி இந்தியர்களின் மனதை தனது தயாரிப்புகள் மூலம் கொள்ளை கொண்டு வரும் சுஸுகி நிறுவனம் கடந்த வாரம் ஜிக்ஸர் மோட்டார் சைக்கிளை வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியது. பின் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ஜிக்ஸர் மோட்டார் சைக்கிள் ஜிக்ஸர் ஆர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நாடு முழுவதும் ஜிக்ஸர் பிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 9 நகரங்களில் ஜிக்ஸர் தினத்தை கொண்டாடி வருகிறது வித்தியாசமான முறையில்.

ஜிக்ஸர் மோட்டார் சைக்கிளின் செயல்பாடு, அதன் பிரேக் உள்ளிட்ட வற்றை விளக்கும் வகையில் ஜரோப் பிய பிரீஸ்டைல் சாம்பியன் அராஸ் கிபைஸா-வைக் கொண்டு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி பார்வையாளர் களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது சுஸுகி.

டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, மும்பை, புணே, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் சாகச நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. சென்னையில் மிகவும் மையப் பகுதியில் அமைந்துள்ள சத்யம் திரையரங்கின் கார் நிறுத்தும் பகுதியில் சாகச நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக நடத்திக் காட்டினார் அராஸ்.

நீண்ட காலம் பயிற்சி மேற்கொண்டு இத்தகைய சாகச நிகழ்ச்சிகளை தாம் பல இடங்களில் போதிய பாதுகாப்பு அம்சங்களோடு மேற்கொண்டு வருவ தாகக் குறிப்பிட்ட அராஸ், பொதுமக்கள் யாரும் இதை செய்து பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து தனது சாகசங்களைத் தொடர்ந்தார். குறிப்பிட்ட பகுதியில் வெகு நேர்த்தியாக அவர் நிகழ்த்திக்காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தியது என்றால் அது மிகையல்ல.

வெறுமனே வாகனங்களை அறிமுகம் செய்வதோடு நிற்காமல், ஜிக்ஸர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி, வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து, சாகச வீரரின் சாகச நிகழ்ச்சிகளோடு பார்வையாளர்கள் மனதில் இடம்பெறும் சுஸுகியின் உத்தி அதன் விற்பனை அதிகரிப்புக்கு நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in