

1933ஆம் ஆண்டு பிறந்த டெனிஸ் வைட்லி அமெரிக்காவைச் சேர்ந்த ஊக்கமூட்டும் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் ஆலோசகர். தனது எழுத்துக்களின் மூலம் புகழ் பெற்றவர். விற்பனையில் மிகப்பெரிய சாதனை புரிந்த ஒலிநாடாக்கள் மற்றும் பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். இவரது ஒலிநாடாக்கள் பதினான்கு மொழிகளில் சுமார் பத்து மில்லியன் அளவிற்கு விற்பனையாகியுள்ளன. இவரது பேச்சு மற்றும் எழுத்துகள் ஏராளமானோரை வெற்றியாளர்களாக மாற உதவியுள்ளது. அதிக மதிப்புடைய அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
மகிழ்ச்சி என்பது அன்பு, கருணை மற்றும் நன்றியோடு ஒவ்வொரு நிமிடமும் வாழும் ஆன்மிக அனுபவம்.
வாழ்க்கையில் திட்டவட்டமான நோக்கம் உடையவர்களே வெற்றியாளர்கள்.
தவறுகள் அல்லது தோல்விகள் என்று எதுவுமில்லை, பாடங்கள் மட்டுமே உள்ளன.
தனிப்பட்ட திருப்தியே வெற்றிக்கு மிக முக்கியமான மூலப்பொருளாக உள்ளது.
பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.
என்ன தவறு நடந்தது என்பதற்கு பதிலாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
வெற்றியானது கிட்டத்தட்ட முழுமையாக செயல்பாடு மற்றும் உறுதி ஆகியவற்றைச் சார்ந்தது.
மாறக்கூடியதை மாற்றுங்கள், மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்.
கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்திற்கான இலக்கினை தெளிவாகவும், விரிவாகவும் அமைத்திடுங்கள்.
தோல்வி என்பது ஒரு தற்காலிக மாற்றுப்பாதைதானே தவிர அது முற்றிலும் அடைக்கப்பட்ட வழி அல்ல.
மற்றொரு முயற்சி அல்லது வேறொரு அணுகுமுறைக்கு கூடுதல் ஆற்றல் தேவை என்பதே வெற்றிக்கான ரகசியம் ஆகும்.