வெற்றி மொழி: சோபோக்ளிஸ்

வெற்றி மொழி: சோபோக்ளிஸ்
Updated on
1 min read

சோபோக்ளிஸ், கிமு 496 முதல் 406 வரையிலான காலத்தை சேர்ந்த பண்டைய கிரேக்க நாடக ஆசிரியர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளதாக வரலாற்று ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவற்றில் ஏழு நாடகங்கள் மட்டுமே இப்பொழுது முழுமையாக கிடைத்துள்ளன. அக்கால விழாக்களில் நடைபெற்ற நாடக போட்டிகளில் அதிக முறை வெற்றிபெற்ற பெருமை இவருக்குண்டு. தன்னுடைய படைப்புகளின் மூலமாக, பாரம்பரிய கிரேக்க நாடக உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

விரைவான முடிவுகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முடிவுகளாகவே உள்ளன.

ஒரு சிறிய கருத்து பெரும்பாலும் அதிக ஞானத்தை கொண்டிருக்கின்றது.

ஞானமிக்க சிந்தனை உடையவர்கள் அனைத்து இடங்களிலும் மேம்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

ஏழ்மையான மனிதன் கூட மரியாதைகளைப் பெற முடியும்.

மகிழ்ச்சியின் மிகவும் உயர்வான பகுதி ஞானமே.

தீய ஆலோசனை வேகமாகப் பயணிக்கின்றது.

அராஜகத்தை விட அதிக கேடானது வேறு எதுவுமில்லை.

அதிகப்படியாக பேசுவது என்பது ஒரு வகை, சரியான தருணத்தில் பேசுவது என்பது மற்றொரு வகை.

ஏமாற்றி வெற்றி பெறுவதைவிட, நேர்மையான தோல்வியையே நான் விரும்புகிறேன்.

பயனுள்ள எதையாவது கற்றுக்கொள்வதற்கு எப்போதும் விருப்பமாய் இருங்கள்.

துன்பங்கள் இல்லாமல் ஒருபோதும் வெற்றி இல்லை.

தவறான ஆலோசனையை விட மோசமான எதிரி வேறு எதுவுமில்லை.

வெற்றி எப்போதும் முயற்சியை சார்ந்தே இருக்கின்றது.

எந்த செயலையும் செய்யாத ஒருவருக்கு, அதிர்ஷ்டம் எந்த உதவியையும் செய்யாது.

யார் தேடிச்செல்கிறார்களோ அவர்களே கண்டடைகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in