

காரின் கூலன்டானது இன்ஜின் அதிக வெப்பமாவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காரை இயக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் கூலன்ட் கன்டெய்னரில் கூலன்ட் போதிய அளவு வரை இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கூலன்ட் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை தவறாமல் மாற்றி வந்தால் இன்ஜின் அதிக வெப்பமாவதைத் தடுக்க முடியும். இதனால் இன்ஜினின் செயல்திறன் அதிகரிக்கும்.
கூலன்ட் மாற்றுவதை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இன்ஜினின் வெப்பநிலை சரியாக வைக்கப்பட்டு இன்ஜினுள் கார்பன் மோனாக்ஸைடு உருவாவதைத் தடை செய்ய வழி வகை செய்கிறது.
கூலன்ட் மாற்றுவதால் கூலிங் சிஸ்டத்தில் உப்பு படிமானம் ஏற்பட்டு அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். அதோடு இதில் உள்ள பாகங்கள் பழுதடையாமல் அதிக நாள் வரை இயங்க வழி ஏற்படும்.
கூலன்ட் கன்டெய்னரில் கூலன்ட் அளவு குறையும் போது, அதற்கு ஈடாக கூலன்ட் அல்லது டிஸ்டில்டு வாட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண தண்ணீர் நிரப்புவதால் ரேடியேட்டரில் விரைவாக உப்பு படிமானம் ஏற்பட்டு கூலன்ட் சிஸ்டத்தில் சுழற்சி தடைபட்டு இன்ஜின் விரைவில் வெப்பமடைய வழி வகுத்து விடும்.
கூலன்ட் மாற்றுவதை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்ஜின் பாகங்களின் தேய்மானம் கட்டுப்படுகிறது. தேய்மானம் குறைவதால் மைலேஜ் அதிகரிக்கிறது.
தகவல் உதவி: கே.னிவாசன்,
உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.
வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும்.
மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in