Published : 11 Oct 2021 07:17 AM
Last Updated : 11 Oct 2021 07:17 AM

ஏற்ற இறக்கத்தை சமாளிக்கும் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட்

பி.ரமணன்,
சிஇ, டபள்யு சி அசோசியேட்ஸ்

அடிக்கடி சொல்லப்படும் ஒரு பழமொழி-மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் மாறாதது. பங்குச் சந்தையின் இயல்பும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். எனவே ஏற்ற இறக்கங்களின் போது அதுசார்ந்து பயத்துக்கு உள்ளாகியோ அல்லது பேராசைப்பட்டோ முடிவுகளை ஓருவர் எடுக்கக் கூடாது. மாறாக அந்த சமயங்களில் ஒருவர் தன்னுடைய முதலீட்டு முடிவுகளில் விவேகமாக இருப்பது முக்கியம்.

சந்தையின் ஏற்ற இறக்கத்தில் முதலீடு செய்வதற்கான சரியான அணுகுமுறை அசெட் அலொகேஷன்தான். உறுதியான அசெட் அலோகேஷன் உத்திதான் ஒருவருடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவை ஒழுக்கமானதாகவும் பல்வேறு விதமான முதலீடுகளை உள்ளடக்கியதாகவும் உருவாக்க உதவும்.

ஒவ்வொரு முதலீட்டு திட்டங்களும் ஒவ்வொரு விதமாக செயலாற்றும். அதில் பேரியல் பொருளாதார நிகழ்வுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் தாக்கம் செலுத்துவதாக அமையும். ஆனாலும் அசெட்அலொகேஷன் அணுகுமுறை போர்ட்ஃபோலியோவின் ஒட்டுமொத்த முதலீட்டு ரிஸ்க்கை குறைக்க உதவியாக இருக்கும். இந்த சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க போர்ட்ஃபோலியோவின் முதலீட்டு வகைகளை காலத்துக்கு ஏற்ப முதலீட்டு ஆலோசகர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி மறுசீரமைக்க வேண்டியது அவசியம்.

ஆனாலும் சந்தையின் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் தன்மையில், ஒரு முதலீட்டில் லாபத்தை எடுத்து, மற்றொன்றில் முதலீடு செய்துஒருவரின் அசெட் அலோகேஷனை சமநிலைப்படுத்துவது என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த சமயத்தில்தான் கைகொடுக்கிறது பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட். இந்த ஃபண்டுகள் அசெட் அலொகேஷனை சந்தையின் மாறுதல்களுக்கேற்ப நிர்வகிக்கிறது. ஈக்விட்டி மற்றும் கடன் திட்டங்களில் அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்து முதலீடுகளை மேற்கொள்கிறது. அதாவது எப்போது சந்தை மதிப்பு குறைவாக இருக்கிறதோ அப்போது பங்குகளில் முதலீடு செய்யும், சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது கடன் திட்டங்களுக்கு முதலீடுகளை மாற்றும். சுருக்கமாக சொன்னால் ‘குறைவான விலையில் வாங்கு, அதிக விலையில் விற்பனை செய்’ இதை தொடர்ச்சியாக செய் என்பதுதான் இதன் முதலீட்டு உத்தி. இது சந்தை இறக்கங்களிலும் போர்ட்ஃபோலியோவின் மதிப்பு குறையாமல் பாதுகாக்கும்.

பங்குச் சந்தையின் தற்போதைய சூழலைப் பார்க்கையில், சிறுமுதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானது விவேகமான முடிவுகளை எடுப்பதுதான். அசெட் அலொகேஷன் அதற்கு அடிப்படையான உத்தி. ஆனால் நெருக்கடியான காலகட்டங்களில் உணர்வுப்பூர்மாக முடிவெடுப்பது என்பது கடினமானதாகும்.

எப்போதுமே நிதி சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது. அதுவும் நெருக்கடியான காலங்களில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது மிகவும் முக்கியமானதாகும். சந்தை அதிரடியாக ஏறும்போதோ அல்லது கடுமையாக இறங்கும்போதோ நம்முடைய உணர்வுகளை எப்படி கையாள்வது? வாங்குவதா விற்பதா என்ன முடிவெடுப்பது என்பதை பொறுத்ததுதான் லாபமும் நஷ்டமும்.

ஆயினும் இதுபோன்ற சமயங்களை அணுகுவதற்கு ஏற்கனவே முயற்சி செய்த மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உத்திகளை கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் என்ன செய்யலாம் என்ற பரிந்துரைகளை வழங்கும். இத்தகைய திட்டமானது தேவையில்லாத குழப்பங்களை நீக்கி சரியான முடிவுகளை எடுக்க உதவும். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் அத்தகைய ஒரு திட்டம்தான். இந்த திட்டம் கடந்த பத்தாண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்கங்களில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக முதலீட்டாளர்களுக்கு உதவியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x